பாடல் #41042
தேவ வசனம் விரும்பியே கேட்போம்
🔤 Thaeva Vasanam Virumpiyae Kaetpom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ வசனம் விரும்பியே கேட்போம் விண்ணையே கண்டு களிப்போட ஆவியின் மூலமாய் கிருபையின் காலம் அனலாய் கேட்டறிவோம் 2. ஆபத்தில் தப்ப வேதத்தைக் கூறுவது ஆவியானவர் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் 3. பாதைக்குத் தீபம் கால்களுக்கு வெளிச்சம் பேதைக்கு ஞானமாமே காதை அடைக்கும் செவிட்டு விரியன்போல் கேளாதே போகாதே 4. சீர்தூக்கிப் பார்க்கும் நேர்மையின் தேவன் சோதித்தறிபவர் காரிருள் நீக்கி கனிவாய் உன்னைப் பாரிலே காப்பாரே 5. ஊழியம் செய்ய சாமுவேலை இரவினில் அழைத்தாரே மாளிகை நிரப்ப ஆயத்தம் செய்யும் வேலையாளாகவே வலுவாய் தொனிக்கும் வருகையின் வசனம் வானவர் கூறுகிறார் நலமாய் எடுப்பாய் மிகவாய்ச் சேர்ப்பாய் ஆயத்தமாகவே 7. பஞ்சம் வருதே வசனம் கிடையா கெஞ்சும் பஞ்சமே தஞ்சம் பிள்ளைகள் கொஞ்சும் புறாபோல் மேகத்தில் பறப்பாரே 8. கேட்பாய் கேட்பாய் சிறைமனிதன்போல் சீக்கிரம் சாகுமுன்னே மீட்கப்படுவாய் ஆவியைப் பெறுவாய் கூவி தேவ அழைக்கும்போது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Vasanam Virumpiyae Kaetpom Vinnaiyae Kantu Kalippoda Aaviyin Moolamaay Kirupaiyin Kaalam Analaay Kaettarivom 2. Aabatthil Thappa Vaedhatthaik Kooruvathu Aaviyaanavar Paavatthaik Kuritthum Neethiyaik Kuritthum Niyaayattheerppaik Kuritthum 3. Paathaikkuth Theebam Kaalkalukku Veliccham Paethaikku Njaanamaamae Kaathai Ataikkum Sevittu Viriyanpol Kaelaathae Pokaathae 4. Seerthookkip Paarkkum Naermaiyin Devan Sothittharibavar Kaarirul Neekki Kanivaay Unnaip Paarilae Kaappaarae 5. Oozhiyam Seyya Saamuvaelai Iravinil Azhaitthaarae Maalikai Nirappa Aayattham Seyyum Vaelaiyaalaagavae Valuvaay Thonikkum Varukaiyin Vasanam Vaanavar Koorukiraar Nalamaay Etuppaay Migavaaych Saerppaay Aayatthamaagavae 7. Panjjam Varuthae Vasanam Kitaiyaa Kenjsum Panjjamae Thanjjam Pillaigal Konjsum Puraapol Maegatthil Parappaarae 8. Kaetpaay Kaetpaay Siraimanidhanpol Seekkiram Saakumunnae Meetkappatuvaay Aaviyaip Peruvaay Koovi Thaeva Azhaikkumpothu