பாடல் #41041
ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளை
🔤 Aa Aayiram Aayiramaam Pon Velligalai
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைப் பார்க்கிலும் கர்த்தர் வேதம் எனக்கு நலம் 1. உம் வேதத்திலுள்ள அதிசயங்கள் - யான் காணும்படி கண்கள் திறந்தீரே - உம் வேதத்தை விட்டு விலகிடாமல் எப்போதும் உம்மோடு ஒன்றாய் வாழ 2. கர்த்தரின் வேதம் என் மகிழ்ச்சியும் - அவர் வசனம் எனக்கு வெளிச்சமும் என் கால்களுக்கு நல்ல தீபமுமாகவே தானே எப்போதும் இருக்கிறது 3. கர்த்தரின் வேதத்தை நேசிப்போர் - மிக சமாதானமாகவே வாழ்கின்றனர் அவர் வேதத்தின்படியே தான் நடக்கின்றவர்கள் உத்தமமானவர்கள் 4. கர்த்தரின் வேதம் சத்தியம்- அவர் வசனம் என்றும் நிலைத்திருக்கும் வானம் பூமி யாவும் அழிந்து ஒழிந்து போகும் கர்த்தர் வார்த்தை ஒழிவதில்லை 5. பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் - வேதம் மிகவும் விரும்பப்படத்தக்கது - நல்ல தேனிலும் தேன் கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேனிலும் இனியது 6. ஆத்துமாவை வேதம் உயிர்ப்பிக்கும் - இந்த சரீரத்தையும் புதுப்பிக்கும் - கர்த்தரின் சத்திய வேதத்தில் எவ்விதக் குறைவும் எவ்விதக் கேடும் இல்லை 7. கர்த்தர் அருளிய புஸ்தகமே - இந்தப் பரிசுத்த வேத புஸ்தகம் -மனு மக்களின் மகிமையான மீட்புக்காகத்தானே ஈவாகத் தேவன் ஈந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa Aayiram Aayiramaam Pon Velligalaip Paarkkilum Kartthar Vaedham Enakku Nalam 1. Um Vaedhatthilulla Athisayanggal - Yaan Kaanumbati Kankal Thirantheerae - Um Vaedhatthai Vittu Vilakitaamal Eppothum Ummotu Onraay Vaazha 2. Karttharin Vaedham En Makizhchsiyum - Avar Vasanam Enakku Velicchamum En Kaalkalukku Nalla Theebamumaagavae Thaanae Eppothum Irukkirathu 3. Karttharin Vaedhatthai Naesippor - Miga Samaathaanamaagavae Vaazhkindranar Avar Vaedhatthinbatiyae Thaan Natakkindravarkal Utthamamaanavarkal 4. Karttharin Vaedham Satthiyam- Avar Vasanam Enrum Nilaitthirukkum Vaanam Poomi Yaavum Azhinthu Ozhinthu Pokum Kartthar Vaartthai Ozhivathillai 5. Ponnilum Mikundha Pasum Ponnilum - Vaedham Migavum Virumbappatatthakkathu - Nalla Thaenilum Thaen Koottil Irunthu Ozhukum Theli Thaenilum Iniyathu 6. Aatthumaavai Vaedham Uyirppikkum - Indha Sareeratthaiyum Puthuppikkum - Karttharin Satthiya Vaedhatthil Evvidhak Kuraivum Evvidhak Kaetum Illai 7. Kartthar Aruliya Pusthakamae - Indhap Parisuttha Vaedha Pusthakam -manu Makkalin Makimaiyaana Meetpukkaagatthaanae Eevaagath Devan Eenthaar