பாடல் #41040
தினமும் தியானித்து மகிழ்ந்திடுவோம்
🔤 Thinamum Thiyaanitthu Makizhnthituvom
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினமும் தியானித்து மகிழ்ந்திடுவோம் கர்த்தரின் வேதத்தை கருத்துடன் நாம் ஆராய்ந்து 1. கர்த்தரின் வேதத்தில் பிரியமாய் இருந்துமே இரவுபகலாக - 2 அவருடைய வேதத்தை தியானிப்போன் பாக்கியவான் என்றாரே 2. வேதமாம் வெளிச்சத்தில் நடந்திடவே நம்மை இறைவன் அழைத்ததால் - 2 வெளிச்சத்தின்படி நாம் நடந்து ஜீவிப்போம் விண்ணுலகம் சேரவே - 2 3. பாதைக்கு தீபமும் பேதைக்கு ஞானமும் வேதம் ஆகையால் - 2 இருளினிலே நாம் இடறி விழாமல் முடிவுவரை நடப்போம் - 2 4. களங்கமில்லாத ஞானப்பாலாம் திரு வேதம் ஆகையால் - 2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல் தினம் தினம் அருந்திடுவோம் - 2 5. ஆத்மீக ஆகாரம் ஆகும் கர்த்தரின் வேதம் ஆகையால் - 2 ஆத்மீகம் பிழைத்துப் பெலனடைந்திடவே தினம் தினம் புசித்திடுவோம் - 2 6. வேதத்தின் படியே நடந்திடுவோர்கள் உத்தமர்கள் என்றார் - 2 உத்தம மார்க்கத்தாராகவே நாமும் ஒழுங்குடன் நடந்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinamum Thiyaanitthu Makizhnthituvom Karttharin Vaedhatthai Karutthudan Naam Aaraaynthu 1. Karttharin Vaedhatthil Piriyamaay Irunthumae Iravubakalaaga - 2 Avarutaiya Vaedhatthai Thiyaanippon Paakkiyavaan Enraarae 2. Vaedhamaam Velicchatthil Natanthidavae Nammai Iraivan Azhaitthathaal - 2 Velicchatthinbati Naam Natanthu Jeevippom Vinnulakam Saeravae - 2 3. Paathaikku Theebamum Paethaikku Njaanamum Vaedham Aakaiyaal - 2 Irulinilae Naam Idari Vizhaamal Mutivuvarai Natappom - 2 4. Kalanggamillaadha Njaanappaalaam Thiru Vaedham Aakaiyaal - 2 Puthithaayp Pirandha Kuzhanthaigalaip Pol Thinam Thinam Arunthituvom - 2 5. Aathmeega Aakaaram Aakum Karttharin Vaedham Aakaiyaal - 2 Aathmeegam Pizhaitthup Pelanatainthidavae Thinam Thinam Pusitthituvom - 2 6. Vaedhatthin Patiyae Natanthituvorkal Utthamarkal Enraar - 2 Utthama Maarkkatthaaraagavae Naamum Ozhungkudan Natanthituvom - 2