பாடல் #41037
அன்பாம் இயேசுவை அன்பின் சொரூபியை
🔤 Anpaam Yesuvai Anpin Soroopiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்பாம் இயேசுவை அன்பின் சொரூபியை என்றென்றும் துதிப்பேன் - 2 அன்பில் நிறைந்தோர் அவனியில் உதித்தோர் மானிடரை இரட்சித்தோர் - 2 2. மானிலத்தில் வந்த மாபெரும்அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 மகிதலத்தை விட்டு மனுஷனாய் அவதரித்த மாபெரும் அன்பே - 2 3. அன்பே அருளே உயிரே உறவே என்றென்றும் துதிப்பேன் அன்பின் நிறைவே அரும்பெரும்பொருளே பொன்னே பூமானே - 2 4. அன்பின் ஆழியே ஆனந்தக் கடலே என்றென்றும் துதிப்பேன் - 2 அன்பின் பெருக்கே வற்றா சமுத்திரமே வாடாத அன்பே - 2 5. மாறா அன்பே குறையா அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 தீராதன்பே அழியாதன்பே ஒழியாத அன்பே - 2 6. ஆழம் நீளம் அறியா அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 அகலம் உயரம் அறியா அன்பே எட்டாத அன்பே - 2 7. ஸ்தோத்திரித்து உம்மைப் புகழ்ந்து போற்றி என்றென்றும் துதிப்பேன் - 2 ஆனந்தமாக அவனியில் உம்மை என்றென்றும் துதிப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpaam Yesuvai Anpin Soroopiyai Enrenrum Thuthippaen - 2 Anpil Nirainthor Avaniyil Uthitthor Maanidarai Iratsitthor - 2 2. Maanilatthil Vandha Maaperumanpae Enrenrum Thuthippaen - 2 Makidhalatthai Vittu Manushanaay Avatharittha Maaperum Anpae - 2 3. Anpae Arulae Uyirae Uravae Enrenrum Thuthippaen Anpin Niraivae Arumperumporulae Ponnae Poomaanae - 2 4. Anpin Aazhiyae Aanandhak Katalae Enrenrum Thuthippaen - 2 Anpin Perukkae Varraa Samutthiramae Vaataadha Anpae - 2 5. Maaraa Anpae Kuraiyaa Anpae Enrenrum Thuthippaen - 2 Theeraadhanpae Azhiyaadhanpae Ozhiyaadha Anpae - 2 6. Aazham Neelam Ariyaa Anpae Enrenrum Thuthippaen - 2 Agalam Uyaram Ariyaa Anpae Ettaadha Anpae - 2 7. Sthotthiritthu Ummaip Pugazhnthu Porri Enrenrum Thuthippaen - 2 Aanandhamaaga Avaniyil Ummai Enrenrum Thuthippaen - 2