பாடல் #41027
காணாமல் நேசிக்கும் என் இயேசுவை
🔤 Kaanaamal Naesikkum En Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணாமல் நேசிக்கும் என் இயேசுவை, கண்களால் கண்டிடும் நாள் நெருங்குதே, பாராளும் வேந்தன் முகம் காணவே, பறந்திடும் நாளுக்காய் நான் ஏங்கினேன், எப்போது வருவீரைய்யா, என் இயேசுவே, இப்போதே வாரும் ஐயா -2 உம் வீட்டில் உம்மோடு எந்நாளும் வாழ என் வீட்டில் உத்தமனாய் வாழ்ந்திடுவேன், உம்மை போல் பிதாவின் சித்தம் நான் செய்வேன் உத்தமனே என்றென்னை அழைத்திடவே எனக்காக ஆயத்தம் செய்திட்ட ஸ்தலத்திலே என்னையும் சேர்த்திட வாருமே, உமக்காக செய்திட்ட ஊழியங்கள் கண்டு எனக்கான கிரீடத்தை சூட்டுமே எக்காளம் தொனித்திடும் சத்தத்தை கேட்பேன் ஏறிவா என்றென்னை அழைத்திடுவீர், கண்ணிமைக்கும் நேரத்தில் உம்மோடு சேருவேன் கறையில்லா மணவாட்டி போல் வருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaamal Naesikkum En Yesuvai, Kankalaal Kantitum Naal Nerungkuthae, Paaraalum Vaendhan Mugam Kaanavae, Paranthitum Naalukkaay Naan Aengkinaen, Eppothu Varuveeraiyyaa, En Yesuvae, Ippothae Vaarum Aiyaa -2 Um Veettil Ummotu Ennaalum Vaazha En Veettil Utthamanaay Vaazhnthituvaen, Ummai Pol Pithaavin Sittham Naan Seyvaen Utthamanae Enrennai Azhaitthidavae Enakkaaga Aayattham Seythitta Sthalatthilae Ennaiyum Saertthida Vaarumae, Umakkaaga Seythitta Oozhiyanggal Kantu Enakkaana Kireedatthai Soottumae Ekkaalam Thonitthitum Satthatthai Kaetpaen Aerivaa Enrennai Azhaitthituveer, Kannimaikkum Naeratthil Ummotu Saeruvaen Karaiyillaa Manavaatti Pol Varuvaen