பாடல் #41017
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் உம் வார்த்தை கேட்கவே நான் வந்து நிற்கிறேன் உம் அழைப்புக்காகவே நான் காத்து நிற்கிறேன் 1. உம் வேதம் குறைவற்றது உயிர் கொடுக்கும் வார்த்தை இது பேதையை ஞானி ஆக்குது கண்களை தெளிவிக்குது வெள்ளியை போல் புடமிட்ட வார்த்தை என்னை ஆற்றி தேற்றி நடத்துற வார்த்தை உயிருள்ள வார்த்தை இது என்னை உணர்வோடு மாற்றியது 2. தாயன்பு தவறினாலும் தனிமையில் நான் நின்றாலும் உம் வேதம் கேட்கையிலே என் வேதனை மறையுதே கேட்பது மட்டும் இல்லாமல் வழி விலகி செல்லாமல் நித்தமும் என்னை காத்திடுங்க உம் சித்தம் போல நடத்திடுங்க