பாடல் #41006
பயந்து கர்த்தரின் பாதை யதனில்
🔤 Payanthu Karttharin Paathai Yathanil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான். முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். உண்ணுதற்கினிய கனிகளைத் தரும், தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். ஒலிவமரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக் கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payanthu Karttharin Paathai Yathanil Paninthu Natappon Paakkiyavaan. Muyanru Uzhaitthae Palanai Unpaan Mutivil Paakyam Maenmai Kaanpaan. Unnudharkiniya Kanigalaith Tharum, Thannizhal Thiraatsaik Kotipol Valarum Kanniya Manaivi Makizhnthu Iruppaal Ennarum Nalanggal Illatthil Purivaal. Olivamaratthai Soozhnthu Maelae Uyarum Pachsilang Kanrugal Polae Melivilaa Nalla Paalarun Paalae Migavum Kalitthu Vaazhvar Anpaalae. Karttharun Veettai Kattaavitil Athaik Kattuvor Muyarsi Veenaam Ari Ithai Karttharaal Varum Sudhanthiram Pillaigal Karppatthin Kaniyum Karttharin Kirupai