பாடல் #41005
என் ஜீவன் பிரியும் நாள்
🔤 En Jeevan Piriyum Naal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் பிரியும் நாள் வரைக்கும் உம் கரங்களில் நான் இருக்க அர்ப்பணித்தேன் உம் கரத்தில் வணைந்திடும் உம் சித்தம் போல் அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய் உம் கரத்தில் என் இயேசு நாதா-2 1.உடைந்த பாத்திரம் நான் என்னை உருவாக்க அறிந்தவரே பயனில்லா பாத்திரம் நான் என்னை பயன்படுத்த தெரிந்தவரே-2 உருவம் இல்லாத களிமண்ணாய் வணைந்தீரே உம் கரத்தால் இதுவரை நடத்தினீர் உம் தயவால் இனியும் நடத்திடுமே-என் ஜீவன் 2.தாயின் கருவில் என்னை உருவாக்கி உமதாக்கினீர் தாயினும் மேலான அன்பை (உம்) மார்போடு அணைத்தளித்தீர்-2 உம்மைப்போல் வேறு தெய்வம் இல்லை நான் நம்பும் கன்மலையே என் காலங்களை உம் கரத்தில் தந்தேன் இனி நான் அல்ல எல்லாம் நீரே-என் ஜீவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan Piriyum Naal Varaikkum Um Karanggalil Naan Irukka Arppanitthaen Um Karatthil Vanainthitum Um Sittham Pol Arppanitthaen Ennai Murrilumaay Arppanitthaen Ennai Muzhuvathumaay Um Karatthil En Yesu Naathaa-2 1.utaindha Paatthiram Naan Ennai Uruvaakka Arindhavarae Payanillaa Paatthiram Naan Ennai Payanbatuttha Therindhavarae-2 Uruvam Illaadha Kalimannaay Vanaintheerae Um Karatthaal Ithuvarai Natatthineer Um Thayavaal Iniyum Natatthitumae-en Jeevan 2.thaayin Karuvil Ennai Uruvaakki Umathaakkineer Thaayinum Maelaana Anpai (um) Maarpotu Anaitthalittheer-2 Ummaippol Vaeru Theyvam Illai Naan Nampum Kanmalaiyae En Kaalanggalai Um Karatthil Thanthaen Ini Naan Alla Ellaam Neerae-en Jeevan