பாடல் #41
அதிகாலை தினம் தேடியே
🔤 Athikaalai Thinam Thaetiyae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை தினம் தேடியே – உம் முகத்தினில் விழித்திடுவேன் புதுகிருபை அதை தேடியே – உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் – என் அன்பின் பாதத்திலே ராஜா அல்லேலூயா – என் தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து காலையில் பணிந்திடுவேன் கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து மகிமையை செலுத்திடுவேன் பாதத்திலே முகம் பதித்து முத்தங்கள் செய்திடுவேன் ராஜா அல்லேலூயா – என் தேவா அல்லேலூயா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட கண்களும் விழித்திடுதே உம்மனம் குளிர என் மனம் பாட ஆயத்தமாகிடுதே உம் வசனம் தியானித்திட உள்ளம் காத்திடுதே ராஜா அல்லேலூயா – என் தேவா அல்லேலூயா 3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல் கருத்தாய் நினைத்திடவே கனிவாய் இரங்கி கருணை ஈந்து கரத்தால் அணைத்திடுமே நாள் முழுதும் வல்லமையால் நிதமும் நனைத்திடுமே ராஜா அல்லேலூயா – என் தேவா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Thinam Thaetiyae – Um Mugatthinil Vizhitthituvaen Puthukirupai Athai Thaetiyae – Um Paadhatthil Amarnthituvaen Aanandham Paerinbam – En Anpin Paadhatthilae Raajaa Allaelooyaa – En Thaevaa Allaelooyaa 1. Karanggalai Viritthu Karttharai Paartthu Kaalaiyil Paninthituvaen Kavalaiyai Maranthu Makizhvudan Irunthu Makimaiyai Selutthituvaen Paadhatthilae Mugam Pathitthu Mutthanggal Seythituvaen Raajaa Allaelooyaa – En Thaevaa Allaelooyaa 2. Kathiravan Varum Mun Karttharai Thaeda Kankalum Vizhitthituthae Ummanam Kulira En Manam Paada Aayatthamaakituthae Um Vasanam Thiyaanitthida Ullam Kaatthituthae Raajaa Allaelooyaa – En Thaevaa Allaelooyaa 3. Kannimai Naeram Ummai Maravaamal Karutthaay Ninaitthidavae Kanivaay Irangki Karunai Eenthu Karatthaal Anaitthitumae Naal Muzhuthum Vallamaiyaal Nidhamum Nanaitthitumae Raajaa Allaelooyaa – En Thaevaa Allaelooyaa