பாடல் #40964
ஓ ஸ்திரீ வித்தேசையா
🔤 O Sthiree Vitthaesaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ! ஸ்திரீ வித்தேசையா, அன்புகூராய்? துன்பம் தீராயோ? வஸ்தோரே, கிறிஸ்துவேதா, மானுவேலே, யேசுநாதா, வந்தெமை க்ருபைக் கண் பாராயோ? - ஓ! 1. ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த அண்ணலே, உமக் கபயமே! ஓ! ஸ்திரீ வித்தேசையா, ஆதரித் திரங்க வேண்டுமே. - ஓ! 2. எத்தனை மனக் கிலேசம்? நித்தமும் சத்துருக்கள் மோசம்; எந்தையே கைவிட்டுவிடாதேயும், ஓ! ஸ்திரீ வித்தேசையா, எப்படியும் காத்தருள் மெய்யா. - ஓ! 3. ஆடுகள் சிதறிப்போச்சோ? அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ? பாடுபட்ட பட்சக் கோனாரே, ஓ! ஸ்திரீ வித்தேசையா, காடுகளில் தேடிப் பாருமேன். - ஓ! 4.மந்தையை க்ருபை கண் பாரும்; சிந்தையில் துயரம் தீரும், சந்ததம் தொழுவம் சேருமேன், ஓ! ஸ்திரீ வித்தேசையா, வந்தனம், உமக்குத் தோத்திரமே! - ஓ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O! Sthiree Vitthaesaiyaa, Anpukooraay? Thunbam Theeraayo? Vasthorae, Kiristhuvaethaa, Maanuvaelae, Yaesunaathaa, Vanthemai Krupaik Kan Paaraayo? - O! 1. Aathi Maanidar Purindha Paadhakam Tholaikka Vandha Annalae, Umak Kapayamae! O! Sthiree Vitthaesaiyaa, Aadharith Thirangga Vaentumae. - O! 2. Etthanai Manak Kilaesam? Nitthamum Satthurukkal Mosam; Enthaiyae Kaivittuvitaathaeyum, O! Sthiree Vitthaesaiyaa, Eppatiyum Kaattharul Meyyaa. - O! 3. Aatugal Sidharippochso? Anniyaruk Kishtam Aachso? Paatubatta Patsak Konaarae, O! Sthiree Vitthaesaiyaa, Kaatugalil Thaetip Paarumaen. - O! 4.manthaiyai Krupai Kan Paarum; Sinthaiyil Thuyaram Theerum, Sandhatham Thozhuvam Saerumaen, O! Sthiree Vitthaesaiyaa, Vandhanam, Umakkuth Thotthiramae! - O!