பாடல் #40666
உமக்காகவே உயிர் வாழ்ந்திட
🔤 Umakkaagavae Uyir Vaazhnthida
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காகவே உயிர் வாழ்ந்திட - 2 அனுகிரகம் தாருமையா – எனக்கு - 2 எத்தனை பாடுகள் எத்தனை நிந்தைகள் - 2 அனைத்தையும் கடந்திட உம் கிருபை போதுமே - 2 ஆராதிப்பேன் அனுதினமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே - 2 1. நான் செய்த பாவங்கள் சிலுவையை கொடுத்ததே நான் செய்த துரோகங்கள் இரத்தம் சிந்த வைத்ததே - 2 இன்னும் இன்னும் எத்தனை எனக்காக சகித்தீரே - 2 எனக்காக சகித்தீரே 2. உம்மை விட்டு தூரம் போனேன் உம்மை மறந்தே வாழ்ந்தேன் - 2 ஆனாலும் நீர் என்னை கைவிடவே இல்லை - 2 கைவிடவே இல்லை 3. நோயினால் வேதனை வந்திட்ட போதும் பேயினால் சோதனை பெருகிட்ட போதும் - 2 தழும்பினால் சுகம்தந்தீர் சாத்தானை ஜெயித்திடவே - 2 சோதனையை வென்றிடவே 4. நம்பினோர் எல்லாம் கைவிட்ட போதும் நம்மவர் எல்லாம் ஒதுங்கின போதும் - 2 இரட்சிப்பின் தேவனென்னை கைவிடவே இல்லை - 2 மரணத்தின் போதும் என்னோடுயிருப்பீர் 5. மறுஜென்ம முழுக்கினாலே மறுபடி பிறந்திடுவேன் பரிசுத்த ஆவியினால் அபிசேகம் பெற்றிடுவேன் - 2 சபையிலே சாட்சியாக வாழ்ந்திட அருள் செய்வீர் - 2 பரலோகம் பறந்துவர பரிசுத்தம் தந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaagavae Uyir Vaazhnthida - 2 Anukirakam Thaarumaiyaa – Enakku - 2 Etthanai Paatugal Etthanai Ninthaigal - 2 Anaitthaiyum Katanthida Um Kirupai Pothumae - 2 Aaraathippaen Anuthinamae Aaraathippaen Ummai Mattumae - 2 1. Naan Seytha Paavanggal Siluvaiyai Kotutthathae Naan Seytha Thuroganggal Rattham Sindha Vaitthathae - 2 Innum Innum Etthanai Enakkaaga Sakittheerae - 2 Enakkaaga Sakittheerae 2. Ummai Vittu Thooram Ponaen Ummai Maranthae Vaazhnthaen - 2 Aanaalum Neer Ennai Kaividavae Illai - 2 Kaividavae Illai 3. Noyinaal Vaedhanai Vanthitta Pothum Paeyinaal Sodhanai Perukitta Pothum - 2 Thazhumpinaal Sugamthantheer Saatthaanai Jeyitthidavae - 2 Sodhanaiyai Venridavae 4. Nampinor Ellaam Kaivitta Pothum Nammavar Ellaam Othungkina Pothum - 2 Iratsippin Devanennai Kaividavae Illai - 2 Maranatthin Pothum Ennotuyiruppeer 5. Marujenma Muzhukkinaalae Marubati Piranthituvaen Parisuttha Aaviyinaal Apisaegam Perrituvaen - 2 Sapaiyilae Saatsiyaaga Vaazhnthida Arul Seyveer - 2 Paralogam Paranthuvara Parisuttham Thanthituveer