பாடல் #40635
என்னில் என்ன கண்டீர் ஐயா இவ்வளவு
🔤 Ennil Enna Kanteer Aiyaa Ivvalavu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் என்ன கண்டீர் ஐயா இவ்வளவு என்னை உயர்த்தி வைத்தீர் நான் என்ன செய்தேன் ஐயா என் மீது கிருபை வைத்தீர் என் சாபத்தை நீர் சுமந்தீர் என் பாவத்தை கழுவி விட்டீர் என்னை உம்மைப்போல் மாற்றிடவே கல்வாரியில் உயிர் கொடுத்தீர் அன்புக்காட்டி அன்புள்ள தேவா உம் அன்பிற்கு அளவே இல்லை கிருபை காட்டிய கிருபையின் தேவா உம் கிருபைக்கு நிகரே இல்லை 1. கஷ்டத்தின் கடலிலும் கண்ணீரின் பள்ளத்தாக்கிலும் என்னோடு இருந்தவரே எனக்காறுதல் ஆனீரே எல்லோரும் என்னை விட்டும் நீர் என்னை விடவில்லை இயேசைய்யா நான் உன்னை விடேன் என்று என் துணையானீரே இயேசைய்யா 2. உம் அன்பை மறக்க இயலாதைய்யா உம் சாட்சியாய் வாழ்வேன் ஐயா உன் கிருபையை அறிவிப்பேன் என் வாழ்நாளெல்லாம் நான் வாழும் இந்த வாழ்வு நீர் எனக்கு கொடுத்ததைய்யா நீர் கொடுத்த ஜீவனுக்காக ஸ்தோத்திரம் இயேசைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil Enna Kanteer Aiyaa Ivvalavu Ennai Uyartthi Vaittheer Naan Enna Seythaen Aiyaa En Meethu Kirupai Vaittheer En Saabatthai Neer Sumantheer En Paavatthai Kazhuvi Vitteer Ennai Ummaippol Maarridavae Kalvaariyil Uyir Kotuttheer Anpukkaatti Anpulla Thaevaa Um Anpirku Alavae Illai Kirupai Kaattiya Kirupaiyin Thaevaa Um Kirupaikku Nigarae Illai 1. Kashtatthin Katalilum Kanneerin Pallatthaakkilum Ennotu Irundhavarae Enakkaarudhal Aaneerae Ellorum Ennai Vittum Neer Ennai Vidavillai Yesaiyyaa Naan Unnai Vitaen Enru En Thunaiyaaneerae Yesaiyyaa 2. Um Anpai Marakka Iyalaathaiyyaa Um Saatsiyaay Vaazhvaen Aiyaa Un Kirupaiyai Arivippaen En Vaazhnaalellaam Naan Vaazhum Indha Vaazhvu Neer Enakku Kotutthathaiyyaa Neer Kotuttha Jeevanukkaaga Sthotthiram Yesaiyyaa