பாடல் #40575
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே
🔤 Asthipaaranggalum Nirmoolamaakirathae
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே நீதிமான் என்ன செய்திடுவான்-2 உம்மையே நாங்கள் நம்பி நிற்கிறோம் நீதிபரரே தயவாய் இறங்கும்-2 கண்ணோக்கிப் பாரும் விடுதலை தாறும் தாமதமின்றி இரட்சிப்பை அருளும் -2 1- தேசம் பாழாகி நாளாகிப் போனதே அக்கிரமம் அணியாயம் தலைவிரித்து ஆடிடுதே-2 நீதியாய் வாசம் செய்யும் ஒரு கூட்ட ஜனங்களோ-2 உமது நாளுக்காக காத்திருக்குதே உமது வருகைக்காக காத்திருக்குதே 2- உம்முடைய வேதத்தையும் உம்மையும் மறந்ததினால் தீவினைகள் தேசத்தின்மேல் தீவிரமாய் வருகிறதே-2 விடுவிப்பார் யாருமின்றி நிற்கதியாய் நிற்கின்றோம்-2 விடுதலை நாயகனோ விடுதலை தாருமையா ஜனங்களின் சிறையிருப்பை மாற்றிடுமையா 3- உமது பார்வைக்கு பொல்லாப்பு செய்பவர்கள் எந்நாளும் சுகித்திருந்து வாழ்ந்திடக் கூடுமோ-2 விலையின்றி விற்க்கப்பட்டோம் பணமின்றி மீட்டுக்கொள்ளும் -2 சிறுமையானவரின் கதறலைக் கேட்பவரே எங்களுக்காய் எழுந்திருந்து வழக்காடிடுமே 4- தண்ணீரும் விறகும் கூட விலைக் கிரயமாய் வருகிறது பாரஞ்சுமந்து எங்கள் கழுத்தெல்லாம் நோகிறது-2 அடிமைகள் ஆளுகிறார்கள் விடுவிப்பார் எவருமில்லை-2 உம்மையன்றி எங்களுக்கு வேறு ஒரு மீட்பரில்லை 5- நீர் கொடுத்த சுதந்திரத்தின் மேன்மையை உணராமல் உம்மை விட்டு தூரமானோம் அனைத்தையும் இழந்து போனோம்-2 இழந்திட்ட யாவையுமே திரும்பத் தாருமையா-2 இல்லாமை இருள் அகற்றி புது ஒளி ஏற்றுமையா சீயோனின் சிறையிருப்பை மாற்றிட வாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asthipaaranggalum Nirmoolamaakirathae Neethimaan Enna Seythituvaan-2 Ummaiyae Naanggal Nampi Nirkirom Neethibararae Thayavaay Irangkum-2 Kannokkip Paarum Vitudhalai Thaarum Thaamathaminri Iratsippai Arulum -2 1- Thaesam Paazhaaki Naalaakip Ponathae Akkiramam Aniyaayam Thalaiviritthu Aatituthae-2 Neethiyaay Vaasam Seyyum Oru Kootta Jananggalo-2 Umathu Naalukkaaga Kaatthirukkuthae Umathu Varukaikkaaga Kaatthirukkuthae 2- Ummutaiya Vaedhatthaiyum Ummaiyum Marandhathinaal Theevinaigal Thaesatthinmael Theeviramaay Varukirathae-2 Vituvippaar Yaaruminri Nirkathiyaay Nirkinrom-2 Vitudhalai Naayakano Vitudhalai Thaarumaiyaa Jananggalin Siraiyiruppai Maarritumaiyaa 3- Umathu Paarvaikku Pollaappu Seypavarkal Ennaalum Sukitthirunthu Vaazhnthidak Kootumo-2 Vilaiyinri Virkkappattom Panaminri Meettukkollum -2 Sirumaiyaanavarin Katharalaik Kaetpavarae Enggalukkaay Ezhunthirunthu Vazhakkaatitumae 4- Thanneerum Virakum Kooda Vilaik Kirayamaay Varukirathu Paaranjsumanthu Enggal Kazhutthellaam Nokirathu-2 Atimaigal Aalukiraarkal Vituvippaar Evarumillai-2 Ummaiyanri Enggalukku Vaeru Oru Meetparillai 5- Neer Kotuttha Sudhanthiratthin Maenmaiyai Unaraamal Ummai Vittu Thooramaanom Anaitthaiyum Izhanthu Ponom-2 Izhanthitta Yaavaiyumae Thirumbath Thaarumaiyaa-2 Illaamai Irul Agarri Puthu Oli Aerrumaiyaa Seeyonin Siraiyiruppai Maarrida Vaarumaiyaa