பாடல் #4042
ஸ்வாமி வான் இரும்பையும்
🔤 Svaami Vaan Irumpaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஸ்வாமி வான் இரும்பையும் பூமி வெண்கலத்தையும் போன்றதால் எம் பாவத்தை நீக்கி கேளும் ஜெபத்தை. 2. ஏரி குளம் ஆறுகள் எங்குமுள்ள ஜீவன்கள் யாவும் மாரிக்காகவே வாஞ்சையுற்று ஏங்கிற்றே. 3. மாந்தர் கொடும் பசியால் வாடிப் பெலவீனத்தால் தொய்ந்து தொய்ந்து போகிறார் நித்தம் நித்தம் சாகிறார். 4. உம்மையன்றிப் பஞ்சத்தை நீக்கி எங்கள் பசியைத் தீர்க்கும் ஜீவதாரகர் இல்லை நீரே ரட்சகர். 5. தயையுள்ள தேவனே யேசுவின் நிமித்தமே மேகத்துக்குக் கற்பியும் சோனாமாரி பொழியும். 6. அதனால் பூமி குளிரும் நிலம் பலனைத் தரும் தேசம் எங்கும் செழிக்கவே யாவும் உம்மைத் துதிக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Svaami Vaan Irumpaiyum Poomi Venkalatthaiyum Pondrathaal Em Paavatthai Neekki Kaelum Jebatthai. 2. Aeri Kulam Aarugal Engkumulla Jeevankal Yaavum Maarikkaagavae Vaanjsaiyurru Aengkirrae. 3. Maandhar Kotum Pasiyaal Vaatip Pelaveenatthaal Thoynthu Thoynthu Pokiraar Nittham Nittham Saakiraar. 4. Ummaiyanrip Panjjatthai Neekki Enggal Pasiyaith Theerkkum Jeevathaarakar Illai Neerae Ratsakar. 5. Thayaiyulla Devanae Yaesuvin Nimitthamae Maegatthukkuk Karpiyum Sonaamaari Pozhiyum. 6. Adhanaal Poomi Kulirum Nilam Palanaith Tharum Thaesam Engkum Sezhikkavae Yaavum Ummaith Thuthikkum.