பாடல் #4021
வேளை இது சபையே
🔤 Vaelai Ithu Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேளை இது சபையே - நித்திரையை விட்டு எழுந்திருக்க - நல்ல நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைக்குட் பிடித்திட, - வேளை 1.நாம் விசுவாசிகளாய்த் - திரும்பின நல்வேளை தன்னிலுமே, ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறிந் தோமல்லோ, - வேளை 2.பாவஇருள்விடுத்தோம், - பகலதுக் கான வொளியடுத்தோம், மேவுமந்தகார வேஷக்கிரியையை விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட, - வேளை 3.தானவனாலயமே - உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல் மேனியைப்பேணும் விருப்பமாகாது, - வேளை 4.கர்த்தரினாலயத்தைக் - கெடுப்போனைக் கர்த்தர் கெடுப்பதல்லால் நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி நீடூழியும் நரகாழியில் வேவானே. - வேளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaelai Ithu Sapaiyae - Nitthiraiyai Vittu Ezhunthirukka - Nalla Naalaikku Innoruvaelaik Kenrennaamal Kaalatthaith Thappaamal Kaikkut Pititthida, - Vaelai 1.naam Visuvaasigalaayth - Thirumpina Nalvaelai Thannilumae, Aamee Thunalvaelai Aiyanin Ratsippu Antaiyirkittiya Thendrarin Thomallo, - Vaelai 2.paavairulvitutthom, - Pakalathuk Kaana Voliyatutthom, Maevumandhakaara Vaeshakkiriyaiyai Vittuvelicchap Paeraayudham Poontida, - Vaelai 3.thaanavanaalayamae - Unthanuda Sareeramum Aatthumamum Naanilameethaesu Naayakarkkaerkaamal Maeniyaippaenum Viruppamaakaathu, - Vaelai 4.karttharinaalayatthaik - Ketupponaik Kartthar Ketuppathallaal Nitthiyathaeva Kopaakkinaikkaalaaki Neetoozhiyum Narakaazhiyil Vaevaanae. - Vaelai