பாடல் #4015
வேதமே என்ன சொல்லுவேன்
🔤 Vaedhamae Enna Solluvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதமே என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப் பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம் காந்தி நற்பனிமழை கசிந்திடும் வானம் புண் மனமுடையோர்க்குப் புகழருந் தானம் புசித்திடக் கசித்திடருசித்திடும் பானம். – வேத சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார் தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார் அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார் அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். – வேத கனபல மருளுவாய் தினந்தினங் காலை களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை தினமென திதயமே திருத்தலுன் வேலை செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. – வேத அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும் அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும் தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும் தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும்.- வேத பொன் அபரஞ்சியிலும் உன்விலை பெரிதே! பூவுலகினிலுனக் குவமைக ளரிதே நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே! நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே!. – வேத இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே! இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே! கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே! கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே!. – வேத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhamae Enna Solluvaen?-nin Maatsiyai Saedha Milaathu Nannaadhar Tham Arul Thirup Paadhamurum Neri Yothu Morae Sathya. – Vaedha Kanmun Nee Ezhunthaanaal Karaiyilaa Njaanam Kaanthi Narpanimazhai Kasinthitum Vaanam Pun Manamutaiyorkkup Pugazharun Thaanam Pusitthidak Kasitthidarusitthitum Paanam. – Vaedha Siriyavar Periyavar Selvarkal Valiyaar Theerarkal Veerarkal Seeriyar Eliyaar Arinjarkal Allavar Aadavar Meliyaar Anaivarum Arunthida Arunthidach Saliyaar. – Vaedha Kanapala Maruluvaay Thinanthinang Kaalai Kalaippinaip Pokkuvaay Kalaippuru Maalai Thinamena Thidhayamae Thirutthalun Vaelai Sepparung Kanidharung Karpakach Solai. – Vaedha Agamuru Maanaigal Vizhunthu Thallaatum Arulnathi Aatugal Natanthuni Lotum Thakavunin Karaigalil Kuruvigal Kootum Tharukkal Sezhitthirukkum Thaasarkal Naatum.- Vaedha Pon Abaranjsiyilum Unvilai Perithae! Poovulakinilunak Kuvamaiga Larithae Ninnai Yasattai Seyvor Nilaimiga Varithae! Ninbatip Pariyaathor Kalvimaa Sirithae!. – Vaedha Irupurang Karukkuvaal Thanilum Nee Koorae! Igaparam Rantirkum Unvazhi Naerae! Kirupai Etthanamunak Kaertra Narpaerae! Kiristhuvin Arulthanai Enakku Nee Vaarae!. – Vaedha