பாடல் #4012
வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா
🔤 Vaedha Nool Othitum Nalla Maeyppaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா பாதையும் சத்யமும் ஜீவன் நீரே பேதையாம் ஏழையேன் பாதை செல்ல நீர் அல்லால் யாரும் இல்லை. இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாரும் இல்லை இயேசு நாதா நீர் அல்லால் யாரும் இல்லை. 2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே சத்துரு சேனையில் வெற்றி தர நீர் அல்லால் யாரும் இல்லை. 3. ஒரே பிதாவை அறிந்திடவே பரிசுத்தாவியைப் பெற்றிடவே வேறேது போக்கும் வழியும் இல்லை நீர் அல்லால் யாரும் இல்லை. 4. நன்மை ஏதும் செய்ய அறிகிலேன் தின்மையே யான் செய்ய திறனுளேன் நற்செய்கை யாவும் உம் சித்தம் செய்ய நீர் அல்லால் யாரும் இல்லை. 5. தேவன் மகத்வத்தில் மேல் வரவே ஜீவ கிரீடத்தைத் தான் தரவே அப்போதும் நாங்கள் பாடிடுவோமே நீர் அல்லால் யாரும் இல்லை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaedha Nool Othitum Nalla Maeyppaa Paathaiyum Sathyamum Jeevan Neerae Paethaiyaam Aezhaiyaen Paathai Sella Neer Allaal Yaarum Illai. Yesu Naathaa! Aezhaikku Neer Allaal Yaarum Illai Yesu Naathaa Neer Allaal Yaarum Illai. 2. Sathya Visvaasatthaik Kaatthidavae Nittham Nin Keertthiyaip Paatidavae Satthuru Saenaiyil Verri Thara Neer Allaal Yaarum Illai. 3. Orae Pithaavai Arinthidavae Parisutthaaviyaip Perridavae Vaeraethu Pokkum Vazhiyum Illai Neer Allaal Yaarum Illai. 4. Nanmai Aethum Seyya Arikilaen Thinmaiyae Yaan Seyya Thiranulaen Narseykai Yaavum Um Sittham Seyya Neer Allaal Yaarum Illai. 5. Devan Makathvatthil Mael Varavae Jeeva Kireedatthaith Thaan Tharavae Appothum Naanggal Paatituvomae Neer Allaal Yaarum Illai.