பாடல் #4008
வெள்ளை அங்கிகள்
🔤 Vellai Angkigal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்? கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும். - வெள்ளை 1.நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர்; கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர். - வெள்ளை 2.குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம். - வெள்ளை 3.ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர்; தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம் - வெள்ளை 4.பசிதாகம் யாவுமற்றார்; பாக்கிய நிலைமை பெற்றார்; உச்சித மோட்சத்தில் கண்ணீர் உருக்கா வாழ்வினை யுற்றார். - வெள்ளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vellai Angkigal Tharittha Vimala Mutthar Ivar Yaar? Kalla Millaa Aattukkuttik Karunaivallal Munnirkum. - Vellai 1.naanaathikkilumirunthu Nayanthu Vandhavar Ivar; Konaathu Thunbak Katalil Kulitthuvandhavar Ivar. - Vellai 2.kuruth Tholaigal Pititthuk Kortravanaich Soozhanirkum Peruttha Koottatthaar Ivar; Paeranpin Atiyaarkalaam. - Vellai 3.aattuk Kuttiyaalae Meetpai Ataindha Utthamar Ivar; Thaettamudanae Naayanaich Saevitthu Nirkinraar Nittham - Vellai 4.pasithaagam Yaavumarraar; Paakkiya Nilaimai Perraar; Uchsidha Motsatthil Kanneer Urukkaa Vaazhvinai Yurraar. - Vellai