பாடல் #4007
வெளிச்சமாகி இரவு பகலை
🔤 Velicchamaaki Iravu Pakalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வெளிச்சமாகி இரவு பகலை வெகுவாய் முதல் நாள் ஏற்படுத்தி ஆகாய விரிவை உண்டாக்கி அமைத்தார் இரண்டாம் நாளதிலே. 2. மூன்றாம் நாளில் ஜலம் பிரிய முளைத்தது தரையில் புல் பூண்டு செடி கொடி விருட்சக் கனிகளுடன் சிறப்பாயிருக்கச் செய்தனரே. 3. நாலாம் நாளில் வானமதில் நவமாய் உதிக்கும் சூரியனும் சந்திரன் கோடி நட்சத்திரம் சர்வ வல்லவர் சொல்லாலமைத்தார். 4. ஐந்தாம் நாளில் நீர் வாழும் அனந்த ஜாதி மச்சங்களும் ஆகாயப் பறவையை உண்டாக்கி ஆகாயத்தில் பறக்க விட்டனரே. 5. ஆறாம் நாளில் ஊர்வனவும் அனந்த ஜாதி மிருகங்களும் அள்ளின மண்ணில் ஆதாமை அமைத்தார் ஊதி உயிர் கொடுத்தார். 6. ஏழாம் நாளில் பூமியிலே எல்லாம் முடிந்து தீர்ந்ததென்று ஓய்ந்திருந்து ஆசீர்வதித்து உயர்வாய்ப் பரிசுத்தப் படுத்தினாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Velicchamaaki Iravu Pakalai Vekuvaay Mudhal Naal Aerpatutthi Aakaaya Virivai Untaakki Amaitthaar Irantaam Naalathilae. 2. Moonraam Naalil Jalam Piriya Mulaitthathu Tharaiyil Pul Poontu Seti Koti Virutsak Kanigaludan Sirappaayirukkach Seythanarae. 3. Naalaam Naalil Vaanamathil Navamaay Uthikkum Sooriyanum Santhiran Koti Natsatthiram Sarva Vallavar Sollaalamaitthaar. 4. Ainthaam Naalil Neer Vaazhum Anandha Jaathi Macchanggalum Aakaayap Paravaiyai Untaakki Aakaayatthil Parakka Vittanarae. 5. Aaraam Naalil Oorvanavum Anandha Jaathi Miruganggalum Allina Mannil Aathaamai Amaitthaar Oothi Uyir Kotutthaar. 6. Aezhaam Naalil Poomiyilae Ellaam Mutinthu Theerndhathenru Oynthirunthu Aaseervathitthu Uyarvaayp Parisutthap Patutthinaarae.