பாடல் #3994
விழுகுது விழுகுது எரிகோ
🔤 Vizhukuthu Vizhukuthu Eriko
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - அல்லேலூயா எழும்புது எழும்புது இயேசுவின் படை (2) துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2) யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தை சுதந்தரிப்போமே (2) உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே (2) கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர் தந்திடுவாரே (2) எதிர்த்து நிற்க எவராலுமே முடியாது என்று வாக்குரைத்தாரே மோசேயோடு இருந்தது போல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் செல்கிறார் தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் அச்சமின்றி துணிந்து செல்வோமே அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே கர்த்தர் வார்த்தை நம் வாயிலே நிச்சயமாய் வெற்றி பெறுவோம் தேசத்து எதிரிகளெல்லாம் திகில் பிடித்து நடுங்குகின்றனர் கர்த்தர் செய்யும் அற்புதங்களை கேள்விப்பட்டு கலங்குகின்றனர் செங்கடலை வற்றச் செய்தவர் சீக்கிரத்தில் வெற்றி தருவார் யோர்தானை நிற்கச் செய்தவர் - நம் பாரதத்தை ஆளுகை செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhukuthu Vizhukuthu Eriko Kottai - Allaelooyaa Ezhumputhu Ezhumputhu Yesuvin Patai (2) Thuthippom Saatthaanai Jeyippom Thuthippom Thaesatthai Sondhamaakkuvom (2) Yosuvaavin Sandhathi Naamae Thaesatthai Sudhandharippomae (2) Udanbatikkaip Petti Nammotu Oor Ooraay Valam Varuvomae (2) Kaal Mithikkum Evvidatthaiyum Kartthar Thanthituvaarae (2) Ethirtthu Nirka Evaraalumae Mutiyaathu Enru Vaakkuraitthaarae Mosaeyotu Irundhathu Pola Saenaigalin Kartthar Nammotu Thalapathiyaay Mun Selkiraar Thalarnthitaamal Pin Thodarvom Acchaminri Thuninthu Selvomae Arikkai Seythu Aarpparippomae Kartthar Vaartthai Nam Vaayilae Nicchayamaay Verri Peruvom Thaesatthu Ethirigalellaam Thikil Pititthu Natungkukindranar Kartthar Seyyum Arpudhanggalai Kaelvippattu Kalangkukindranar Senggatalai Vartrach Seythavar Seekkiratthil Verri Tharuvaar Yorthaanai Nirkach Seythavar - Nam Paarathatthai Aalukai Seyvaar