பாடல் #3993
விழித்திருப்போம் வேகம்
🔤 Vizhitthiruppom Vaegam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்! கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்! இடைவிடாது ஜெபித்திடுவோம்! இந்தியரை நாம் சுதந்தரிப்போம்! விரைந்து நெருங்கிடும் அவர் வருகை விளைந்து நிற்கும் வயல் வெளிகள் தாமதிக்க இனி காலமில்லை சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்! அத்தி மரமும் துளிர்த்ததே ஆண்டவர் வருகையும் நெருங்கியதே விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்! இந்தியர் அனைவரும் நமது ஜனம் ஆண்டவர் இயேசுவின் பின்னே வர சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம் மங்கள நித்திய வாழ்வளிப்போம்! தூய்மை வாழ்வை அணிந்திருப்போம் தூயவர் வருகைக்குக் காத்திருப்போம் வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம் மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhitthiruppom! Vaegam Uzhaitthituvom! Kazhinthitum Naatkalai Unarnthituvom! Itaivitaathu Jepitthituvom! Inthiyarai Naam Sudhandharippom! Virainthu Nerungkitum Avar Varukai Vilainthu Nirkum Vayal Veligal Thaamathikka Ini Kaalamillai Siluvai Veerarae Aartthezhuveer! Atthi Maramum Thulirtthathae Aandavar Varukaiyum Nerungkiyathae Vithaitthavar Munnor Aruppavar Naamae Kalanjsiyam Saerppom Virainthituvom! Inthiyar Anaivarum Namathu Janam Aandavar Yesuvin Pinnae Vara Suvisaeshath Theebam Aerrivaippom Manggala Nitthiya Vaazhvalippom! Thooymai Vaazhvai Aninthiruppom Thooyavar Varukaikkuk Kaatthiruppom Vanjjakap Paeyinai Jeyitthituvom Mangkaa Vilakkaay Erinthituvom!