பாடல் #3982
வினை சூழா திந்த
🔤 Vinai Soozhaa Thindha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வினை சூழா திந்த இரவினில் காத்தாள், விமலா, கிறிஸ்து நாதா. கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர காசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை 1.சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்; செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்; பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்; பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். - வினை 2.சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே; ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே; சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. - வினை 3.ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்; ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்; பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்; பட்சம் வைததாள்வையேல், அதுவே ஆனந்தம். - வினை 4.இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்; இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்; உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்; உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். - வினை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinai Soozhaa Thindha Iravinil Kaatthaal, Vimalaa, Kiristhu Naathaa. Kanakaapi Shaeganae, Avaniyark Kolir, Pira Kaasanae, Pava Naasanae, Svaami! - Vinai 1.sendra Pakal Muzhuthum Ennaik Kan Paartthaay; Sey Karumanggalil Karunaigal Pootthaay; Ponraa Thaathma Sareeram Pizhaikka Oon Paartthaay; Pollaap Paeyin Mosam Ninrenaik Kaatthaay. - Vinai 2.sooriyan Asthamith Thotich Senraanae; Jothinat Satthiram Ezhundhana Vaanae; Saerum Vilangku Patsi Uraibathi Thaanae Sendrana; Atiyaenum Palli Kolvaenae. - Vinai 3.jeevan Thanthenai Meettoy Siriyaen Un Sondham; Jegath Thinbanggal Vizhainthu Saerthal Nirppandham; Paaviyaen Thozhuthaen Nin Paathaara Vindham; Patsam Vaidhathaalvaiyael, Athuvae Aanandham. - Vinai 4.inraip Pozhuthil Naan Sey Paavanggal Theeraay; Idarkal Thunbanggal Neengga Ennaik Kai Saeraay; Undran Atimaik Kenrum Uvandharul Kooraay; Uyirai Etuppaiyael, Un Mutthi Thaaraay. - Vinai