பாடல் #3964
விடுதலை விடுதலை விடுதலை
🔤 Vitudhalai Vitudhalai Vitudhalai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை! விடுதலை! விடுதலை பெற்றேன்! விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே! இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை! தடுக்கும் பாவத் தளைகளில் - விடுதலை! கெடுக்கும் தீயப் பழக்கத்தில் - விடுதலை! என்ன சந்தோஷம்? இந்த விடுதலை! எந்தன் இயேசு இலவசமாய்த் தந்த சந்தோஷம் எரிக்கும் கோபப்பிடியினில் - விடுதலை! வதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை! அன்பர் இயேசுவே தந்த விடுதலை! இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை! அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை! மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை! ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே! தாழ்மைகொள்ள, உண்மை பேச ஈந்தார் சக்தியே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai! Vitudhalai! Vitudhalai Perraen! Vidhavidhamaay Paavatthilae Jeevittha Naanae! Indha Naalil Endhan Yesu Sondha Ratthatthaal Thanthittaarae Endhan Aathma Meetpin Vitudhalai! Thatukkum Paavath Thalaigalil - Vitudhalai! Ketukkum Theeyap Pazhakkatthil - Vitudhalai! Enna Santhosham? Indha Vitudhalai! Endhan Yesu Ilavasamaayth Thandha Santhosham Erikkum Kobappitiyinil - Vitudhalai! Vathaikkum Theeya Poraamaiyil - Vitudhalai! Anbar Yesuvae Thandha Vitudhalai! Inbak Kaanaan Senritum Varai Untae Vitudhalai! Atukkaay Paesum Poyyinil - Vitudhalai! Mitukkaay Veesum Perumaiyil Vitudhalai! Aezhmai Roobamae Konda Yesuvae! Thaazhmaikolla, Unmai Paesa Eenthaar Sakthiyae!