பாடல் #3953
விசுவாசத்தால் நீதிமான்
🔤 Visuvaasatthaal Neethimaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; - மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான். 1.நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; - முழு விஷமான பாவத்தினால் இறந்தோர். - விசு 2.உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; - நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. - விசு 3.பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; - எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். - விசு 4.தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; - அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். - விசு 5.நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? - அவன் பாதகம் பழிமரணம், யாவுமே போகும். - விசு 6.தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; - தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். - விசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasatthaal Neethimaan Pizhaippaan; - Mey Visuvaasamullavan Thaan Thazhaippaan. 1.nisamaaga Naam Paavatthinil Piranthor; - Muzhu Vishamaana Paavatthinaal Iranthor. - Visu 2.uyyum Vakaiyariyom; Pelanaeyillai; - Narar Seyyum Kiriyaigalil Nalanaeyillai. - Visu 3.paavak Katanozhikkap Palamae Yarrom; - Ech Saabam Azhivinukkum Thakaimai Yurrom. - Visu 4.devan Kirupaiyonrae Namaip Paarkkum; - Avar Maavanpae Paavigalin Katan Theerkkum. - Visu 5.neethimaanaik Kurtranjsaatta Yaaraalaeyaakum? - Avan Paadhakam Pazhimaranam, Yaavumae Pokum. - Visu 6.devanin Pillai Naanenrae Avan Thulluvaan; - Theeya Paava Vazhidhanaip Pakaitthae Thalluvaan. - Visu