பாடல் #39457
எலியாவின் நாட்களில்
🔤 Eliyaavin Naatkalil
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன் எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் ஆவியில் அனல் கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும் பெருமழை பெய்யப்பண்ணவும் அதிகாரம் தந்தார் தேவன் தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம் பதில் இல்லாமல் தலைகுனிந்தார் பாகால் தெய்வமே அல்ல – என்று நம் தேவன் நிரூபித்தார் 5. செப்பனிட்ட பலிபீடத்தில் தேவ அக்கினி இறங்கியதே கர்த்தரே தெய்வம் என்று தேவ ஜனங்கள் பணிந்தனரே 6. இரட்டிப்பான வரங்கள் பெற்ற தேவ தலைமுறை எழும்பிடவே தேவனின் முன்னே நிற்போம் நம் இயேசுவை உயர்த்திடுவோம் 7. சோர்ந்திட்ட எலியாவை கர்த்தர் தூக்கி நிறுத்தினரே பிரயாணம் வெகு தூரம் உண்டு என்று சொல்லி ஓட வைத்தாரே 8. பரலோக ரதம் வந்திடும் மகிமையில் நம்மை சேர்த்திடும் ஆயத்தமாகிடுவோம் நாம் அன்பர் இயேசுவை சந்திக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eliyaavin Naatkalil Perum Kaariyam Seytha Devan Enggalin Indha Naatkalil Perum Kaariyam Seythituvaar Eliyaavin Devan Avar Enggal Devan Avar Naerrum Inrum Enrum Maaraadhavar 1. Athikaara Ariyanaiyil Amarnthirunthor Alari Ninraar Aaviyil Anal Konda Eliyaa Anjsaamal Nimirnthu Ninraar 2. Kaaganggalaik Kontu Kartthar Eliyaavai Poshitthaarae Maritthitta Vidhavaiyin Makanai Uyirotu Ezhumbach Seythaarae 3. Panimazhai Nirutthidavum Perumazhai Peyyappannavum Athikaaram Thanthaar Devan Tham Thaasan Eliyaavukku 4. Paakaalin Koottamellaam Pathil Illaamal Thalaikuninthaar Paakaal Theyvamae Alla – Enru Nam Devan Niroopitthaar 5. Seppanitta Palipeedatthil Thaeva Akkini Irangkiyathae Karttharae Theyvam Enru Thaeva Jananggal Panindhanarae 6. Irattippaana Varanggal Pertra Thaeva Thalaimurai Ezhumpidavae Devanin Munnae Nirpom Nam Yesuvai Uyartthituvom 7. Sornthitta Eliyaavai Kartthar Thookki Nirutthinarae Pirayaanam Veku Thooram Untu Enru Solli Oda Vaitthaarae 8. Paraloga Ratham Vanthitum Makimaiyil Nammai Saertthitum Aayatthamaakituvom Naam Anbar Yesuvai Santhikkavae