பாடல் #39444
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
🔤 Ethaiyum Thaangkum Idhayam Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இயேசுவுக்காக வாழ்கின்ற பிள்ளைக்கு எதையும் சகிக்க பெலன் வேண்டும் அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் -2 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இயேசுவுக்கா வாழ்கின்ற நமக்கு எதையும் சகிக்க பெலன் வேண்டும் அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு தொல்லையின் மிகுதியால் கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தரே உந்தன் நித்திய கன்மலை -2 ஆகாரை கண்டவர் கண்ணீரை துடைத்திட்டார் உன்னையும் மீட்டிட அழைத்தாரே அன்பினால் -2 என்னென்ன துன்பங்கள் உன் வாழ்வில் வந்தாலும் எதற்கும் அஞ்சாதே இயேசுவே பரிகாரி -2 சிலுவையில் சிந்திய இரத்தத்தால் மீட்பை இன்றே நீ பெறுவாய் சோர்ந்து போகாதே -2 கண்ணீரே உன் வாழ்வின் உணவாக இருந்தாலும் கலங்கித் தவிக்காதே கர்த்தரை நம்பீடு -2 கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கின்றார் அஞ்சாதே நெஞ்சமே ஆயத்தமாயிரு -2 ஆண்டவர் வருகையே மிகவும் சமீபம் ஆயத்தமாவோம் அப்பாவை சந்திக்க -2 பரிசுத்தம் ஒன்றே அவரின் விருப்பம் இன்றே நாம் கொடுப்போம் நமது உள்ளத்தை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethaiyum Thaangkum Idhayam Vaentum Yesuvukkaaga Vaazhkindra Pillaikku Ethaiyum Sakikka Pelan Vaentum Avarukkaay Vaazhkindra Thaeva Pillaikku Avarukkaay Vaazhkindra Thaeva Pillaikku Ethaiyum Thaangkum Idhayam Vaentum -2 Ethaiyum Thaangkum Idhayam Vaentum Yesuvukkaa Vaazhkindra Namakku Ethaiyum Sakikka Pelan Vaentum Avarukkaay Vaazhkindra Thaeva Pillaikku Thollaiyin Mikuthiyaal Kashtanggal Vanthaalum Karttharae Undhan Nitthiya Kanmalai -2 Aakaarai Kandavar Kanneerai Thutaitthittaar Unnaiyum Meettida Azhaitthaarae Anpinaal -2 Ennenna Thunbanggal Un Vaazhvil Vanthaalum Edharkum Anjsaathae Yesuvae Parikaari -2 Siluvaiyil Sinthiya Ratthatthaal Meetpai Inrae Nee Peruvaay Sornthu Pokaathae -2 Kanneerae Un Vaazhvin Unavaaga Irunthaalum Kalangkith Thavikkaathae Karttharai Nampeetu -2 Kanneeraith Thutaippavar Kathavantai Nirkinraar Anjsaathae Nenjjamae Aayatthamaayiru -2 Aandavar Varukaiyae Migavum Sameebam Aayatthamaavom Appaavai Santhikka -2 Parisuttham Onrae Avarin Viruppam Inrae Naam Kotuppom Namathu Ullatthai -2