பாடல் #39428
கைதட்டி பாடியே
🎙 கிறிஸ்தவ பாடல்
கைதட்டி பாடியே கொண்டாடுவோம் விண்ணவர் இயேசுவை பாடிடுவோம் ஆவியில் நிறைந்தே கொண்டாடுவோம் ஆனந்தமாக ஆர்ப்பரிப்போம் -2 ஆராதனை செய்குவோம் ஆனந்த துதி ஒலிக்க அல்லேலூயா பாடுவோம் என்னாளும் கொண்டாடுவோம் 1. மன்னவன் இயேசுவை மகிழ்வுடனே மகிழ்ந்து பாடிடுவோம் -2 ஆர்ப்பரித்தே நாம் அன்பரை பாடி உன்னத தேவனை பணிந்திடுவோம் -2 2. இம்மட்டும் நடத்தின தேவனையே துதித்து பாடிடுவோம் -2 இன்னல்கள் நீக்கி துன்பங்கள் மாற்றிய இனிய இயேசுவை கொண்டாடுவோம் -2 3. ஊழிய பாதையில் நடத்தினவர் இனியும் நடத்திடுவார் -2 நன்மையும் கிருபையும் பின்தொடர்ந்திடுமே நன்றியின் நிறைவுடன் கொண்டாடுவோம் -2