பாடல் #39422
எப்பத்தா திறக்கப்படுவதாக
🔤 Eppatthaa Thirakkappatuvathaaga
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்பத்தா திறக்கப்படுவதாக - 4 வானம் திறந்து தெய்வம் பேசணும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக - 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் என்று சொன்னவரே ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் என்று உரைத்தவரே தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து - 2 திறக்கச் செய்பவரே என் வாசல்கள் திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே கர்ப்பத்தைத் திறக்கலையோ... அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து தீர்க்கனாய் எழுப்பலையோ... இல்லாதவைகளை இருப்பவைப்போல - 2 அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே உருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள் 3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க வானங்கள் திறக்கலையோ! கையளவு மேகத்தால் பெருமழை பொழிய அற்புதம் செய்யலையோ! என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை - 2 கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே கிருபையாய் பொழிந்தருளும்... 4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து அற்புதம் பெறவில்லையோ குருடரின் கண்களும் உம் கரம் படவே பார்வை பெறவில்லையோ.. ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட - 2 அற்புதம் செய்தருளும் என் இயேசுவே அற்புதம் செய்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppatthaa Thirakkappatuvathaaga - 4 Vaanam Thiranthu Theyvam Paesanum Vaasalkal Ellaam Inrae Thirakkanum Eppatthaa Thirakkappatuvathaaga - 4 1. Thirandha Vaasalai Un Munnae Vaitthaen Enru Sonnavarae Oruvarum Poottakkootaa Vaasalkal Thirappaen Enru Uraitthavarae Thaaveethin Thiravukolaith Tholinmael Vaitthu - 2 Thirakkach Seypavarae En Vaasalkal Thirakkach Seypavarae 2. Aapirakaamum Saaraalum Eesaakkaip Peravae Karppatthaith Thirakkalaiyo... Annaalin Kanneerkku Saamuvael Thanthu Theerkkanaay Ezhuppalaiyo... Illaadhavaigalai Iruppavaippola - 2 Azhaitthuth Thandharulum En Vaazhvilae Uruvaakkith Thandharulum Kootudhal Sarananggal 3. Eliyaavin Jebam Kaettu Akkini Irakka Vaananggal Thirakkalaiyo! Kaiyalavu Maegatthaal Perumazhai Pozhiya Arpudham Seyyalaiyo! En Thaesam Engkilum Ezhuppudhal Mazhaiyai - 2 Kirupaiyaay Pozhindharulum En Yesuvae Kirupaiyaay Pozhindharulum... 4. Sevidarum Oomaiyum Kattugal Utainthu Arpudham Peravillaiyo Kurudarin Kankalum Um Karam Patavae Paarvai Peravillaiyo.. Aezhai En Pelaveenam Ikkanam Neengkida - 2 Arpudham Seytharulum En Yesuvae Arpudham Seytharulum