பாடல் #39403
ஆளுகை என்றும் உம்மிடம்தான்
🔤 Aalukai Enrum Ummidamthaan
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆளுகை என்றும் உம்மிடம்தான் ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும் இயேசுவே உம் செயலே தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும் இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6) யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39) உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35) ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18) உம்மிடம் வாதம் செய்பவன் யார் புவியில் உந்தன் ஆளுகை பூக்களில் உந்தன் ஆளுகை அண்டம் முழுவதும் ஆளுகை அணுவிலும் உந்தன் ஆளுகை மனிதன் மீதும் ஆளுகை மிருகம் மீதும் ஆளுகை கிரகம் மீதும் ஆளுகை கிருமியின் மீதும் ஆளுகை எங்கும் உந்தன் ஆளுகை என்றும் உந்தன் ஆளுகை நன்றே உந்தன் ஆளுகை ஆளுகை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalukai Enrum Ummidamthaan Aalpavar Enrum Neer Mattumthaan Raajjiyam Enrum Ummidamthaan Raajjiyam Seypavar Neer Mattumthaan Aakkamum Ookkamum Neekkamum Munnokkamum Yesuvae Um Seyalae Thortramum Aertramum Thaertramum Nalmaartramum Yesuvae Um Sollilae Vinnakamengkum Mannakamengkum Aandavaa Undhan Aalukaithaan (sang 135:6) Yosanaiyilum Seykaiyaavilum Natappathu Undhan Viruppanthaan (aesaayaa 46:10) Oruvanai Kaappeer Oruvanaik Kolveer (upaa 32:39) Ummidam Kaelvigal Kaetpavan Yaar (thaaniyael 4:35) Oruvanai Mannitthu Oruvanai Thantippeer (romar 9:18) Ummidam Vaadham Seypavan Yaar Puviyil Undhan Aalukai Pookkalil Undhan Aalukai Andam Muzhuvathum Aalukai Anuvilum Undhan Aalukai Manidhan Meethum Aalukai Mirugam Meethum Aalukai Kirakam Meethum Aalukai Kirumiyin Meethum Aalukai Engkum Undhan Aalukai Enrum Undhan Aalukai Nanrae Undhan Aalukai Aalukai