பாடல் #3940
வாலிபர்தமக்கூண் அதுவாகும்
🔤 Vaalibarthamakkoon Athuvaakum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்; பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்; புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். 3. புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்; நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம். 4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது; புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaalibarthamakkoon Athuvaakum; Vayothiyarkkum Athunavaakum; Paalakarkkiniya Paalum Athaam; Patimee Thaathmapasi Thanikkum. 2. Satthurup Paeyudan Amarpuriyum Tharunam Athu Nal Aayudhamaakum; Putthirar Mitthirarotu Makizhum Pozhuthum Athunal Uravaakum. 3. Pulaimaeviya Maanida Ridhayam Perudharkathumarunthaay; Nilaiyaa Nararvaanaal Nilaikka Naeyakaaya Karpam Athaam. 4. Kathiyin Vazhikaanaadhavarkal Kannukkariya Kalikkam Athu; Puthiya Erusaalaembathikkup Pokum Payanatthunaiyum Athu