பாடல் #39392
பாராய் பாராய்
🔤 Paaraay Paaraay
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாராய் பாராய் பாராய் பாராய் பாக்கிய சீயோனின் கண்ணே சீராக வேயிதோ நேராய் பரத்தினின்று சீவ நதிப் பிரவாக மேவு துன்னதமாக 1. ஆதி யானுமாட்டுக் குட்டியுமே தங்கும் ஆசனத் திருந்து வீசும் பளிங்கைப் போலே தேசு துலங்க வருஞ் சுத்த சீவ தண்ணீரின் சித்ர நதியது தா னுத்தமியே கண்ணாலே 2. வீதி நடுவிலேயும் நதியினிரு கரையும் விந்தையாகப் பனிரண்டு விதக் கனிகள் மாதந்தோறும் தந்து சாதிகளுக் காரோக்கியம் வருத்தும் பத்திரத்தைக் கொண்டு இருத்துஞ் சீவ விருட்சம் 3. நதியினோரத் தினக் கரையு மிக் கரையினும் நன்று மினிதுமாக நின்று போசனத்துக் கிதமுங் கனிகளோ யா திலைகளு திராதென்று மிருக்குஞ் சகல விதத் தருக் களனந் தனந்தம் 4. வானத்திருந் திறங்கிப் பரமன் மகிமை கொண்ட மகத்துவமான பரி சுத்த யேருசலே மேன்மைப் பட்டண முற்றும் பளிங்குனொளிவு தோன்ற வெளிச்சம் யஸ் பிக் கற் போல் பளிச் சென் றொளிர்து சாலேம் 5. பெரிது முயரமான மதிளு மாறி ரண்டு பெரிய வாசல் கண் மேற் சுரர்கள் பன்னிருவருக் குரிய இசறாவேற் பன்னிருவர் கோத்திரத்துக் குடைய பெயர் பதித்த கடவுள் திருநகரம் 6. நாலு திக்குகனான மூன்று வாசன்க ரத்தின் மதிட் பனிரண்டஸ்தி வாரங்களு மேலு மாட்டுக் குட்டியின்ற னாறிரண்டு வேதப் போஸ்தலர் நாமம் தீதப் பிரஸ் தாபங்களும். 7. உன்னதச் சதுரமான பட்டணத்தின் உயரமகலம் நீளஞ் சரிசமான தூரம் பன்னீராயிர மிஸ் தாதி றூற்றுநாற் பத்து நான்கு முழஞ் சித்திர மதிளுயரம். 8. சுத்தக் கண்ணாடிக் கொக்குஞ் சுத்தப் பசும் பொன்னாகத் துலங்கும் பட்டண மதிளிலங்குங் கட்டுதல் யஸ்பி அஸ்தி வாரங்களோ சகல வித ரத்தனங்க ளாலு மலங்கரித்த கோல விசித்திரங்கள். 9. ஆதி யஸ்பி நீலக்கல்லே கலக தோனி அதின் பின்னாக மரகதங் கோமேதகங் கெம்பு மாதே கிரி சொலித்து பேரில் புஷியராகம் வயிடூரியம் பத்ம ராகம் மேதிஸ்து. 10. ஆறிரண்டு வாசலொவ் வொன் றொரு முத்தான அரிய பட்டண வீதி தெரிதற் கன்ணாடிபோன்ற சோதிப் பொன்னே யதிற் தேவாலய மில்லைச் சூரிய சந்திரனில்லை ஆரியனின் மகிமை. 11. ஆட்டுக் குட்டியதின் தீபமேதிரித்துவ ஆதியான் மகிமை வெளிச்சமே யதற்குள்ப் பாட்டுத் திறத்து வேதநாயகனுந் தவீதும் படித்துப் பரம சேனை நடித் தெக் களிப்பதையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaraay Paaraay Paaraay Paaraay Paakkiya Seeyonin Kannae Seeraaga Vaeyitho Naeraay Paratthininru Seeva Nathip Piravaaga Maevu Thunnathamaaga 1. Aathi Yaanumaattuk Kuttiyumae Thangkum Aasanath Thirunthu Veesum Palingkaip Polae Thaesu Thulangga Varunj Suttha Seeva Thanneerin Sithra Nathiyathu Thaa Nutthamiyae Kannaalae 2. Veethi Natuvilaeyum Nathiyiniru Karaiyum Vinthaiyaagap Panirantu Vidhak Kanigal Maadhanthorum Thanthu Saathigaluk Kaarokkiyam Varutthum Patthiratthaik Kontu Irutthunj Seeva Virutsam 3. Nathiyinorath Thinak Karaiyu Mik Karaiyinum Nanru Minithumaaga Ninru Posanatthuk Kidhamung Kanigalo Yaa Thilaigalu Thiraathenru Mirukkunj Sakala Vidhath Tharuk Kalanan Thanandham 4. Vaanatthirun Thirangkip Paraman Makimai Konda Makatthuvamaana Pari Suttha Yaerusalae Maenmaip Pattana Murrum Palingkunolivu Thondra Veliccham Yas Pik Kar Pol Palich Sen Rolirthu Saalaem 5. Perithu Muyaramaana Mathilu Maari Rantu Periya Vaasal Kan Maer Surarkal Panniruvaruk Kuriya Isaraavaer Panniruvar Kotthiratthuk Kutaiya Peyar Pathittha Katavul Thirunakaram 6. Naalu Thikkuganaana Moonru Vaasanka Ratthin Mathit Panirandasthi Vaaranggalu Maelu Maattuk Kuttiyindra Naarirantu Vaedhap Posthalar Naamam Theedhap Piras Thaabanggalum. 7. Unnathach Sathuramaana Pattanatthin Uyaramakalam Neelanj Sarisamaana Thooram Panneeraayira Mis Thaathi Roorrunaar Patthu Naanku Muzhanj Sitthira Mathiluyaram. 8. Sutthak Kannaatik Kokkunj Sutthap Pasum Ponnaagath Thulangkum Pattana Mathililangkung Kattudhal Yaspi Asthi Vaaranggalo Sakala Vidha Ratthanangga Laalu Malanggarittha Kola Visitthiranggal. 9. Aathi Yaspi Neelakkallae Kalaka Thoni Athin Pinnaaga Marakathang Komaedhakang Kempu Maathae Kiri Solitthu Paeril Pushiyaraagam Vayitooriyam Pathma Raagam Maethisthu. 10. Aarirantu Vaasalov Von Roru Mutthaana Ariya Pattana Veethi Theridhar Kannaatipondra Sothip Ponnae Yathir Thaevaalaya Millaich Sooriya Santhiranillai Aariyanin Makimai. 11. Aattuk Kuttiyathin Theebamaethiritthuva Aathiyaan Makimai Velicchamae Yatharkulp Paattuth Thiratthu Vaedhanaayakanun Thaveethum Patitthup Parama Saenai Natith Thek Kalippathaiyum