பாடல் #39390
மங்களம் நித்திய சுபமங்களஞ்
🔤 Manggalam Nitthiya Subamanggalanj
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்களம் நித்திய சுபமங்களஞ் செய மங்களம் நித்திய சுப மங்களம் துங்க முத்தரோடும்பர் பற்றி யிறைஞ்சுமர்ச் செயனந்த சத்திய சுந்தரப் பரமண்டலப் பொருளே - மங்களம் 1. வான நாடுல கோடதின் மேவிய வாருதிச் சிலைவார் வனப்புற மாருதத்தடர் மானிடத்திரள் மாமதிக் கண மாவி பற் பொருள் வானவித்தகர் யாவையும் ஞான மோடறு வாசர மானதுள ஞாபகத்துடனேர் மிகுத்த வினோத வற்புத ரூபமுற்றிட நாம மிட்டவை மாதிறத்துட னே படைத்த திரித்துவனே - மங்களம் 2. ஏவை மானினியாள் கனியே நுக ரேத மற்றிடவே தயைக் கிருபை யாய் நினைத்திருளே விளக்கிய ஞான சித்திர பரனெனப் புக லேசு ரட்சக ராசனை பாவை மா மரியாடனை யாகவே யாயர் மெச்சிட மூவருச் சித மே கொடுத் தடியே துதித்திட வே வெலைப் பதி மாடடைக் குடில் மீதளித்த வனாதியே - மங்களம் 3. தேசுலாவிய தேவ தெய்வீகனின் சீருளப்படி பூவிலுற்றருள் சேர் மறைக் கலையோ தியற்புதமே செய்து த்தம் சீடரைத் தெரி வாயெடுத் தெழிலாகவே மாசு மாறிடவே கொல்கொதாவெனு மாவரைக்கருகாக மெத்த வியாகுலத் தொடுபாடு பட்டெழு வாசகத்துடன் மா கொலைக் கழு மேல் மரித்த கிறிஸ்துவே - மங்களம் 4. ஆதி வாரத்திலே செய மேவியே யாரணப் பிரவை யாயுயிர்த்ததி சீடருக் கருளே யளித்துவி ணேறியச் சயனார் வலத்தரி யாசனத்தனை மீதிலே நீத மோடுல கோர் தணி பாதலர் நீள் பரத்தினு ளோரு மர்ச்சனை யே செயப் பெருமை யோடு ரத்தினி நேர்மை யிட்டிரு தீர்வை யிட்டிட வே வரச் செய்யும் ரட்சகா - மங்களம் 5. ஈறிலாத பரா பரனார்க் குளு மேசு தற் பரனான சற் குரு மானு வேற் பவ நாசன் முத்தொழி னாதனிச் சய ஞான சத்திய நாயகர்க் குளு மாகியே வீறு மாறிடவே மனு வோரிட மேவி யற்புத மாயிடர்களை யே தவிர்த்தவர் மீதனுக் கிரக மாய் மனத் தினையே கதுப் பர வாயமைத்திடு மாவியே - மங்களம் 6. ஞான மாதவமே மிகு சீடர்க னாதனைப் பெலனோடு ளத்தினி லேதுதித் தொரு நேச முற்றணி நாவலர்க் கருட் கோவிலுட செப மே செபித்திடு போதிலே வான நாடு ணர்வாய் ழல் ரூபமாய் மா செயற் களையே யியற்றிடவே யருட் கடலான வற்புத மா வரப் பிரசாத மர்ச் செயர் மேனிறப்பு மிஸ்பிரித்துவே - மங்களம் 7. தேதநாயகியான சீயோன் மகள் சீர் மிகுத்திடும் ஞான கற்புட னே மணப் பதியான நித்திய தீரனுக்குளே மாதிரட்தி ரட் சேயரைப் பெறலாகியே மாவ தீத தயாப மனோகர வாழ்வு பெற்று மெந்நாளு நித்திய சோபனச் சுப சோபனத் தோடு மா மணப் பதி வீடு புக்கி மகா சிறப் பொடு வாழ்கவே - மங்களம் 8. மாதவன் சுவார்ச்சையரும் வாழ்கவே வானரும் புவி யானருங் கவி வானரும் பல ஞானருங் குரு மார்களுந் துரைமார்களும் பெரி யோர்களுந் தினம் வாழ்கவே வேதநாயக சாஸ்திரி வாழ்கவே விந்தையுந் தவமுந் தொடர்ந் தெழு விம் பசம் பிரம விங்கிதம் செறி விஞ்சை யஞ்சன பந்து பெந்துகள் வென்றி தங்கியும் வாழ்கவே - மங்களம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam Nitthiya Subamanggalanj Seya Manggalam Nitthiya Suba Manggalam Thungga Muttharotumbar Parri Yirainjsumarch Seyanandha Satthiya Sundharap Paramandalap Porulae - Manggalam 1. Vaana Naatula Kodathin Maeviya Vaaruthich Silaivaar Vanappura Maarudhatthatar Maanidatthiral Maamathik Kana Maavi Par Porul Vaanavitthakar Yaavaiyum Njaana Modaru Vaasara Maanathula Njaabakatthudanaer Mikuttha Vinodha Varpudha Roobamurrida Naama Mittavai Maathiratthuda Nae Pataittha Thiritthuvanae - Manggalam 2. Aevai Maaniniyaal Kaniyae Nuga Raedha Marridavae Thayaik Kirupai Yaay Ninaitthirulae Vilakkiya Njaana Sitthira Paranenap Puga Laesu Ratsaka Raasanai Paavai Maa Mariyaadanai Yaagavae Yaayar Mechsida Moovaruch Sidha Mae Kotuth Thatiyae Thuthitthida Vae Velaip Pathi Maadataik Kutil Meedhalittha Vanaathiyae - Manggalam 3. Thaesulaaviya Thaeva Theyveeganin Seerulappati Poovilurtrarul Saer Maraik Kalaiyo Thiyarpudhamae Seythu Ththam Seedaraith Theri Vaayetuth Thezhilaagavae Maasu Maaridavae Kolkothaavenu Maavaraikkarukaaga Mettha Viyaakulath Thotupaatu Pattezhu Vaasakatthudan Maa Kolaik Kazhu Mael Marittha Kiristhuvae - Manggalam 4. Aathi Vaaratthilae Seya Maeviyae Yaaranap Piravai Yaayuyirtthathi Seedaruk Karulae Yalitthuvi Naeriyach Sayanaar Valatthari Yaasanatthanai Meethilae Needha Motula Kor Thani Paadhalar Neel Paratthinu Loru Marcchanai Yae Seyap Perumai Yotu Ratthini Naermai Yittiru Theervai Yittida Vae Varach Seyyum Ratsakaa - Manggalam 5. Eerilaadha Paraa Paranaark Kulu Maesu Thar Paranaana Sar Kuru Maanu Vaer Pava Naasan Mutthozhi Naadhanich Saya Njaana Satthiya Naayakark Kulu Maakiyae Veeru Maaridavae Manu Vorida Maevi Yarpudha Maayidarkalai Yae Thavirtthavar Meedhanuk Kiraka Maay Manath Thinaiyae Kathup Para Vaayamaitthitu Maaviyae - Manggalam 6. Njaana Maadhavamae Miku Seedarka Naadhanaip Pelanotu Latthini Laethuthith Thoru Naesa Murtrani Naavalark Karut Koviluda Seba Mae Sepitthitu Pothilae Vaana Naatu Narvaay Zhal Roobamaay Maa Seyar Kalaiyae Yiyarridavae Yarut Katalaana Varpudha Maa Varap Pirasaadha March Seyar Maenirappu Mispiritthuvae - Manggalam 7. Thaedhanaayakiyaana Seeyon Makal Seer Mikutthitum Njaana Karpuda Nae Manap Pathiyaana Nitthiya Theeranukkulae Maathiratthi Rat Saeyaraip Peralaakiyae Maava Theedha Thayaaba Manogara Vaazhvu Perru Mennaalu Nitthiya Sobanach Suba Sobanath Thotu Maa Manap Pathi Veetu Pukki Makaa Sirap Potu Vaazhkavae - Manggalam 8. Maadhavan Suvaarchsaiyarum Vaazhkavae Vaanarum Puvi Yaanarung Kavi Vaanarum Pala Njaanarung Kuru Maarkalun Thuraimaarkalum Peri Yorkalun Thinam Vaazhkavae Vaedhanaayaka Saasthiri Vaazhkavae Vinthaiyun Thavamun Thodarn Thezhu Vim Pasam Pirama Vingkidham Seri Vinjsai Yanjjana Panthu Penthugal Venri Thangkiyum Vaazhkavae - Manggalam