பாடல் #39387
காத்தாள் வல்லவனே
🔤 Kaatthaal Vallavanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காத்தாள் வல்லவனே சருவேசா காத்தாள் வல்லவனே. சாத்தான் கெட்டோடவே, தாரணி கொண்டாடவே - காத்தாள் 1. வலராசர் வாழ்கவே மாற்றலர்கள் தாழ்கவே வலிதந்து காமனு நசரேனா. - காத்தாள் 2. போதகர் சிறக்கவே மாதவர் நிறக்கவே பாதாம்புயந்தாரய் பர தேவா. - காத்தாள் 3. திருச்சபை பெருக்கமாய் குருக்களும் நெருக்கமாய்ச் சீரோங்கக் கிருபை கூரமரேசா. - காத்தாள் 4. பந்துசனம் நீடவே சந்ததிகள் கூடவே பாதார விந்தந் தாபர தேவா. - காத்தாள் 5. புத்திரர் செழிக்கவு மித்திரர் களிக்கவும் பூதலந் தழைக்கவுஞ் செய்திரியேகா. - காத்தாள் 6. பாவிகட் கிரங்கியே ஆவியின் வரங்களை மேவியருளம் பரா மனுவேலா. - காத்தாள் 7. மிக்க புகழ் நாட்டு மேன்மை நலங்காட்டு வேதநாயகன் பாட்டுப் பாராட்டு. - காத்தாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatthaal Vallavanae Saruvaesaa Kaatthaal Vallavanae. Saatthaan Kettodavae, Thaarani Kontaadavae - Kaatthaal 1. Valaraasar Vaazhkavae Maartralarkal Thaazhkavae Validhanthu Kaamanu Nasaraenaa. - Kaatthaal 2. Podhakar Sirakkavae Maadhavar Nirakkavae Paathaampuyanthaaray Para Thaevaa. - Kaatthaal 3. Thirucchapai Perukkamaay Kurukkalum Nerukkamaaych Seeronggak Kirupai Kooramaraesaa. - Kaatthaal 4. Panthusanam Needavae Sandhathigal Koodavae Paathaara Vindhan Thaabara Thaevaa. - Kaatthaal 5. Putthirar Sezhikkavu Mitthirar Kalikkavum Poodhalan Thazhaikkavunj Seythiriyaekaa. - Kaatthaal 6. Paavigat Kirangkiyae Aaviyin Varanggalai Maeviyarulam Paraa Manuvaelaa. - Kaatthaal 7. Mikka Pugazh Naattu Maenmai Nalangkaattu Vaedhanaayakan Paattup Paaraattu. - Kaatthaal