பாடல் #39386
ஆசீர்வாதம் தந்தனு
🔤 Aaseervaadham Thandhanu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாதம் தந்தனுக் கிரகம் செய் ஐயா ஏசுநாயகா ஆண்டவா உனின் கிருபை கூர் மேசையா தேசுலாவிய நேச மெய் மறைத் திருச்சபை யினம் பெருக்க மாகியே மாசதான தீவினையுறாமலே மாயோக மதாய் மேன்மைகளே நீடிமெய்யாய் வாழ்கவே - ஆசீர் 1. விற்பன உபதேசிமாருக்கும் வாத்திமாருக்கும் மெய்ச்சபை பணிவிடை உத்தியோகர்க்கும் சற் குருக்கள் மெஞ்ஞானி மாருக்கும் தலைமை யோருக்கும் புலமை யோருக்கும் பற்பல தருமத் துரை மாருக்கும் பக்கிஷத் துனின் முக்கிய நற்கருணைக் கனம் பெற மிக்க மிக்கவே. - ஆசீர் 2. சத்துருக்கள் தீ வினையடாமலே பசாசுலகுடல் சதிகளே செய்யும் பகையடாமலே நித்தம் நோய் பிணி சேர்ந்திடாமலே நெடுந்து யர்களும் நேர்ந்திடாமலே சித்தமாக என்னாளும் காத்துமே சிந்தைக் குண மிகுந்தற் புத விந்தைப்படி இந்தச் செணம். - ஆசீர் 3. மைந்தர் மாதர்கள் மகிழ்ந்து கூடவே சந்ததிகள் நீடவே மட்டில்லா களிப்பாய் கொண்டாடவே விந்தை யான சோபனங்கள் சூடவே வேதநாயகன் பதங்கள் பாடவே சிந்தையாக வந்தெந்த நாளிலும் திடத்தி வருவினை கடத்தியருள் பரன் இடத்தில் நிலை பெற நடத்தி யனுதினம். - ஆசீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadham Thandhanuk Kirakam Sey Aiyaa Aesunaayakaa Aandavaa Unin Kirupai Koor Maesaiyaa Thaesulaaviya Naesa Mey Maraith Thirucchapai Yinam Perukka Maakiyae Maasathaana Theevinaiyuraamalae Maayoga Mathaay Maenmaigalae Neetimeyyaay Vaazhkavae - Aaseer 1. Virpana Ubathaesimaarukkum Vaatthimaarukkum Meycchapai Panivitai Utthiyogarkkum Sar Kurukkal Menjnjaani Maarukkum Thalaimai Yorukkum Pulamai Yorukkum Parpala Tharumath Thurai Maarukkum Pakkishath Thunin Mukkiya Narkarunaik Kanam Pera Mikka Mikkavae. - Aaseer 2. Satthurukkal Thee Vinaiyataamalae Pasaasulakudal Sathigalae Seyyum Pakaiyataamalae Nittham Noy Pini Saernthitaamalae Netunthu Yarkalum Naernthitaamalae Sitthamaaga Ennaalum Kaatthumae Sinthaik Kuna Mikundhar Pudha Vinthaippati Indhach Senam. - Aaseer 3. Maindhar Maadharkal Makizhnthu Koodavae Sandhathigal Needavae Mattillaa Kalippaay Kontaadavae Vinthai Yaana Sobananggal Soodavae Vaedhanaayakan Pathanggal Paadavae Sinthaiyaaga Vanthendha Naalilum Thidatthi Varuvinai Katatthiyarul Paran Idatthil Nilai Pera Natatthi Yanuthinam. - Aaseer