பாடல் #39384
சந்தத மங்கள மங்களமே
🔤 Sandhatha Manggala Manggalamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தத மங்கள மங்களமே சந்தத மங்கள மங்களமே அந்த மாதி யிலானருள் சேயா எந்தை யேசுக்கிறிஸ்து சகாயா. - சந்தத 1. ஆறு சாடி அயமது வாகவே வேறுசெய் கலிலேய வினோதா மாறிலாமலிம் மன்றல் செழிக்க நற் பேறு தந்தருளாய் பிரதாபா. - சந்தத 2. அந்தரம் பரம்பூமி யடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா இந்த நாள் மணஞ் செய்யுமிவர்க்கருள் தந்துனாசிடை சாற்றுந் தயாபா. - சந்தத 3. வையமுற்ற மணவரைப் பந்தலி லையனே யுன்னருள் கொடு வந்திருந் துய்ய வைங் குறியாலுமு வந்தருள் செய்யுமேக திரித்துவ தேவா. - சந்தத 4. கர்த்தனே கருணைக் கடலேயுயர் பெத்தலைப் பிரதாப விசேடா புத்திரர் பெறவும் புகழோங்கவுஞ் சித்தம் வைத்திம் மணர்க்கருள் தேவா. - சந்தத 5. வேதநாயகன் பாடற்கு மங்களம் விமலனாஞ் சருவேசற்கு மங்களம் ஏதமற்ற வரூபிக்கு மங்களம் யேசுநாத சுவாமிக்கு மங்களம்.- சந்தத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sandhatha Manggala Manggalamae Sandhatha Manggala Manggalamae Andha Maathi Yilaanarul Saeyaa Enthai Yaesukkiristhu Sakaayaa. - Sandhatha 1. Aaru Saati Ayamathu Vaagavae Vaerusey Kalilaeya Vinothaa Maarilaamalim Mandral Sezhikka Nar Paeru Thandharulaay Pirathaapaa. - Sandhatha 2. Andharam Parampoomi Yatanggalum Vinthai Maevi Niraindha Visaalaa Indha Naal Mananj Seyyumivarkkarul Thanthunaasitai Saarrun Thayaapaa. - Sandhatha 3. Vaiyamurtra Manavaraip Pandhali Laiyanae Yunnarul Kotu Vanthirun Thuyya Vaing Kuriyaalumu Vandharul Seyyumaega Thiritthuva Thaevaa. - Sandhatha 4. Kartthanae Karunaik Katalaeyuyar Petthalaip Pirathaaba Visaetaa Putthirar Peravum Pugazhonggavunj Sittham Vaitthim Manarkkarul Thaevaa. - Sandhatha 5. Vaedhanaayakan Paadarku Manggalam Vimalanaanj Saruvaesarku Manggalam Aedhamartra Varoopikku Manggalam Yaesunaadha Suvaamikku Manggalam.- Sandhatha