பாடல் #39383
இந்த மங்கலஞ்
🔤 Indha Manggalanj
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த மங்கலஞ் செழிக்கவே கிருபை செய்யு மெங்கள் திரித்துவ தேவனே. சுந்தரக் கானாவின் மணப் பந்தலிற் சென்றம் மணத்தைக் கந்தரச மாகச் செய்த விந்தை போலிங்கேயும் வந்து. - இந்த 1. ஆதி தொடுத்தன்பை யெடுத்தாய், மனுடர் தமை யாணும் பெண்ணுமாகப் படைத்தாய் நீதிவரம் நாலுங் கொடுத்தாய், பெற்றுப்பெருகி நிற்க வுலகத்தில் விடுத்தாய் மாதவர் பணியும் வேத, போதனேயந்தப் படியுன் னாதரவைக் கொண்டு சுதன், நீதியை நம்பிப்புரிந்த - இந்த 2. தக்க அபிராமும் விண்டனன், அதனைமன துக்குளெலியேசர் கொண்டனன் முக்கிய ஆரானில் தண்டின, னினைத்தபடி சக்கிய மதாகக் கண்டனன் பக்குவ முரைத்திடாரெ, பக்காளு மீசாக்குவுக்குப் பக்குவத்தில் வேட்டலாகப் பக்கிஷமாய்ச் செய்தாப் போலே - இந்த 3. சத்திய வேதத்தின் வாசனே, யருளுபரி சுத்த சுவிசேட நேசனே பத்தர்கள் பவவிமோசனே, பழுதணுவு மற்ற கிறிஸ்தேசு ராசனே வெற்றியால் யாக் கோபுவுக்கு, முற்றினு மளித்த பேறாய்ப் புத்திர சம்பத்துண்டாகி, நித்திய சுப சோபனமாய் - இந்த 4. இங்கித மிகுந் தெய்வீகப்-பராபரனா லெங்கும் வளரும் நல்யோக சங்கை பெற்றுயர் சினேகத், தேவசகாய சங்கிதனருள் விவேக நன்குணர் வேதநாயகன், தங்கிய சபைகள் மகிழ்ந் தங்கிஷம் விளங்கும் வாய்மை, மங்கள மங்களமாக - இந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Manggalanj Sezhikkavae Kirupai Seyyu Menggal Thiritthuva Devanae. Sundharak Kaanaavin Manap Pandhalir Sendram Manatthaik Kandharasa Maagach Seytha Vinthai Polingkaeyum Vanthu. - Indha 1. Aathi Thotutthanpai Yetutthaay, Manudar Thamai Yaanum Pennumaagap Pataitthaay Neethivaram Naalung Kotutthaay, Perrupperuki Nirka Vulakatthil Vitutthaay Maadhavar Paniyum Vaedha, Podhanaeyandhap Patiyun Naadharavaik Kontu Sudhan, Neethiyai Nampippurindha - Indha 2. Thakka Apiraamum Vindanan, Adhanaimana Thukkuleliyaesar Kondanan Mukkiya Aaraanil Thantina, Ninaitthapati Sakkiya Mathaagak Kandanan Pakkuva Muraitthitaare, Pakkaalu Meesaakkuvukkup Pakkuvatthil Vaettalaagap Pakkishamaaych Seythaap Polae - Indha 3. Satthiya Vaedhatthin Vaasanae, Yarulubari Suttha Suvisaeda Naesanae Pattharkal Pavavimosanae, Pazhudhanuvu Martra Kiristhaesu Raasanae Verriyaal Yaak Kopuvukku, Murrinu Malittha Paeraayp Putthira Sambatthuntaaki, Nitthiya Suba Sobanamaay - Indha 4. Ingkidha Mikun Theyveegap-paraabaranaa Lengkum Valarum Nalyoga Sangkai Perruyar Sinaegath, Thaevasakaaya Sangkidhanarul Vivaega Nankunar Vaedhanaayakan, Thangkiya Sapaigal Makizhn Thangkisham Vilangkum Vaaymai, Manggala Manggalamaaga - Indha