பாடல் #39382
வாரீர் மண நலுங்கிட
🔤 Vaareer Mana Nalungkida
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரீர் மண நலுங்கிட மட மயிலே மயிலே மயிலே வாசமாய் வாரீர் மண நலுங்கிட 1. பாரோர் புகழும் மாபிர காமின் சுபுத்திரி தேவ பற்பணி கற்புக் கனிம னற் புதச் சீயோன் மின்னாட்கு. - வாரீர் 2. வெள்ளைப் போளங் காசியா மிருது சுகந் தங்களாற் கிள்ளை மொழி தெள்ளமுது வள்ளல் மணவாளியர்க்கே. - வா 3. சுத்த நரது தயி லத்தின் பரணி கொண்டே யுத்தமி தேவாட்டுக் குட்டி சித்திர மயிலாளுக்கே. - வா 4. நானக் குங்குமஞ் சாந்து மேன்மைப் பரிமளத்தால் மானச் சீயோனணங்கு ஞானப் பூங்கோதையர்க்கு. - வா 5. பன்னீரல் பான் மீறாவும் பொன்னின் கிண்ணங்களேந்தி யன்ன நடை மின்னழகி-யுன்னத கன்னி யாஸ்திரிக்கே. - வா 6. அந்த சீயோன் மலையின் விந்தைக் குமாரியர்க்கு கந்த வர்க்கங்களினால் சுந்தரத் தொயிலெழுதி. - வா 7. மாப்பிள்ளை சிங்கம் வந்தார் மண வீடலங்கரித்தார் தாப்பிரிய சீயோன் மகட்குக் கோப்புடன் சாலேமின் பெண்காள். - வா 8. வேதநாயகன் பாடும் நாதனார்க்குக் கலியாண மாதர்க்கரசி யோரே யூதக் குலஸ்திரி வாழ்க. - வாரீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaareer Mana Nalungkida Mata Mayilae Mayilae Mayilae Vaasamaay Vaareer Mana Nalungkida 1. Paaror Pugazhum Maapira Kaamin Suputthiri Thaeva Parpani Karpuk Kanima Nar Pudhach Seeyon Minnaatku. - Vaareer 2. Vellaip Polang Kaasiyaa Miruthu Sugan Thanggalaar Killai Mozhi Thellamuthu Vallal Manavaaliyarkkae. - Vaa 3. Suttha Narathu Thayi Latthin Parani Kontae Yutthami Thaevaattuk Kutti Sitthira Mayilaalukkae. - Vaa 4. Naanak Kungkumanj Saanthu Maenmaip Parimalatthaal Maanach Seeyonanangku Njaanap Poongkothaiyarkku. - Vaa 5. Panneeral Paan Meeraavum Ponnin Kinnanggalaenthi Yanna Natai Minnazhaki-yunnatha Kanni Yaasthirikkae. - Vaa 6. Andha Seeyon Malaiyin Vinthaik Kumaariyarkku Kandha Varkkanggalinaal Sundharath Thoyilezhuthi. - Vaa 7. Maappillai Singgam Vanthaar Mana Veedalanggaritthaar Thaappiriya Seeyon Makatkuk Koppudan Saalaemin Penkaal. - Vaa 8. Vaedhanaayakan Paatum Naadhanaarkkuk Kaliyaana Maadharkkarasi Yorae Yoodhak Kulasthiri Vaazhka. - Vaareer