பாடல் #39381
மங்கள மங்களம்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள மங்களமே மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள இங்கிதமே. அமலா தயாபரா நினதாசியே மிகவே சமாதானமுஞ் சந்தோஷ பாக்கிய மாக வாழ்கவுமே. 1. திரியேக ரட்சகனே மரியாள் திருச் சுதனே திரியேகர் நாமத்திலே யனுதினமே செய் அற்புதனே. 2. மணவாளனும் மணவாளியும் மகப் பெற் றொரு மித் தொன்றவே மண நாளிற் றந்த மெய் வார்த்தையை மறவாம லென்றென்றுமே. 3. சல்லாபமும் உல்லாசமும் சாமி கிறிஸ்துவிலே எல்லா செல்வங்களும் பாக்கியங்களும் யேசுவின் நாமத்திலே 4. சற்குரு மாருப தேசி வாத்தியர் திழைத்துச் செழித்துறவே சத்திய திருச்சபை அண்ணாவி மார்களும் நித்திய மகிழ் பெறவே. 5. பதமே படித்திசை வேத நாயகன் கவித்திறமே நிதமே யடித்துணையே பெருகிநீ டூழியும் வாழ்வுறவே.