பாடல் #39378
நித்திய மாகுதே யிருண்ட நித்திய மாகுதே
🔤 Nitthiya Maakuthae Yirunda Nitthiya Maakuthae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய மாகுதே யிருண்ட நித்திய மாகுதே ஒகோ நித்திய மாகுதே வேதனை ஐயோ நித்திய மாகுதே ஒகோ சாத்தான் தீவினைவாதனை ஐயோ நித்திய மாகுதே 1. பத்துக் கற்பனைப் பிரகாரம் பாழ் நரகக் குழியே கிறிஸ்துவைப் பற்றாதவர் வாதனை யூழி யூழியே 2. செத்துச் செத்துச் சாகா கஸ்திபட்டு வேகாத் தீயின் மேற் கட்டையாய்ப் போட்டாட்டி ஒகோ 3. அக்கினிக் கெந்தகமே துக்க சாகரமே அழுகையும் பற்கடிப்பு மாறாதே ஒகோ 4. அக்கினிய வியாதே துக்கமுகி யாதே அரித்தரிக்கும் பூச்சியு மரியாதே ஒகோ 5. மாயாத சோகமே ஓயாத தாகமே வன்னிச் சுவாலையின் வாழ்க்கையே ஒகோ 6. பாதாள மாளியே வேதாள கூளியே பாய்ந்து கெற்சிக்கும் பயங்கரமே ஒகோ 7. அக்கிரமகாரர் துற்குணக்கியானர் யாவரும் நரகத்திற் சாய்வாரே ஒகோ 8. மேசியாவை விட்டோர் மெய்யாகக் கெட்டோர் வேதநாயகன்றன் பாட்டாரே ஒகோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Maakuthae Yirunda Nitthiya Maakuthae Oko Nitthiya Maakuthae Vaedhanai Aiyo Nitthiya Maakuthae Oko Saatthaan Theevinaivaadhanai Aiyo Nitthiya Maakuthae 1. Patthuk Karpanaip Pirakaaram Paazh Narakak Kuzhiyae Kiristhuvaip Parraadhavar Vaadhanai Yoozhi Yoozhiyae 2. Setthuch Setthuch Saakaa Kasthibattu Vaekaath Theeyin Maer Kattaiyaayp Pottaatti Oko 3. Akkinik Kendhakamae Thukka Saagaramae Azhukaiyum Parkatippu Maaraathae Oko 4. Akkiniya Viyaathae Thukkamuki Yaathae Arittharikkum Poochsiyu Mariyaathae Oko 5. Maayaadha Sogamae Oyaadha Thaagamae Vannich Suvaalaiyin Vaazhkkaiyae Oko 6. Paathaala Maaliyae Vaethaala Kooliyae Paaynthu Kersikkum Payanggaramae Oko 7. Akkiramakaarar Thurkunakkiyaanar Yaavarum Narakatthir Saayvaarae Oko 8. Maesiyaavai Vittor Meyyaagak Kettor Vaedhanaayakandran Paattaarae Oko