பாடல் #39372
அல்லாவொரு நபியாங்கு
🔤 Allaavoru Napiyaangku
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லாவொரு நபியாங்கு மோதுங் கேடது போடுங்கோ நம் அல்லா. சல்லாப நூலே நல்லாவியாலே தருமனு வேலாவே. - அல்லா 1. எல்லாரும் வாரும் பொல்லாத பேரும் இல்லாத பேருந்தானே கல்லாதோராரும் நில்லாமற் சேரும் நல்லாயனம்முட கோனே. - அல்லா 2. அந்தர வானுஞ் சுந்தரவுலகுந் தந்த வொரு வன்றானே வந்தானே நந்தாதா அவன் சொந்தம குணன்றானே. - அல்லா 3. ஈசாவலா மகராசா தயாபர வேசாறலே தினமே மாசாலமே விய பூசாரி மார்கள் பிசாசான பேர்சனமே. - அல்லா 4. பித்தர்கள் சிலைகள் முற்றிலும் வீணே பேதமையது காணே கற்றது மிலையோ வானவர் கோனோ கல்லதிலிருப் பானோ. - அல்லா 5. செம்பதுஞ் சிலையும் நம் பரனாமோ தேறின ஞானிக ளே கும்பியில் விழுவீர் வம்பு செய்யாதீர் குணப்படு மிது நாளே. - அல்லா 6. ஆதாரமே தவர் பாதார விந்தமே அருயாருட சொந்தமே தீதான பாதகர் பாதாள வீடது சேர்வார் கணிற் பந்தமே. - அல்லா 7. நெல்வேலி வேதநாயகன் பாட்டை நெடுகிலும் பாராட்டே பல்லூழி காலம் வாழ் மோட்ச வீட்டைப் பதிய மனத்தை நாட்டே. - அல்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaavoru Napiyaangku Mothung Kaedathu Potungko Nam Allaa. Sallaaba Noolae Nallaaviyaalae Tharumanu Vaelaavae. - Allaa 1. Ellaarum Vaarum Pollaadha Paerum Illaadha Paerunthaanae Kallaathoraarum Nillaamar Saerum Nallaayanammuda Konae. - Allaa 2. Andhara Vaanunj Sundharavulakun Thandha Voru Vanraanae Vanthaanae Nanthaathaa Avan Sondhama Kunanraanae. - Allaa 3. Eesaavalaa Makaraasaa Thayaabara Vaesaaralae Thinamae Maasaalamae Viya Poosaari Maarkal Pisaasaana Paersanamae. - Allaa 4. Pittharkal Silaigal Murrilum Veenae Paedhamaiyathu Kaanae Kartrathu Milaiyo Vaanavar Kono Kallathilirup Paano. - Allaa 5. Sembathunj Silaiyum Nam Paranaamo Thaerina Njaaniga Lae Kumpiyil Vizhuveer Vampu Seyyaatheer Kunappatu Mithu Naalae. - Allaa 6. Aathaaramae Thavar Paathaara Vindhamae Aruyaaruda Sondhamae Theethaana Paadhakar Paathaala Veedathu Saervaar Kanir Pandhamae. - Allaa 7. Nelvaeli Vaedhanaayakan Paattai Netukilum Paaraattae Palloozhi Kaalam Vaazh Motsa Veettaip Pathiya Manatthai Naattae. - Allaa