பாடல் #39368
இரக்கமிலையோ நீ
🔤 Irakkamilaiyo Nee
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கமிலையோ நீ இத்தனை சுற்றுகள் கற்றதுமறிவே இரக்கமிலையோ 1. நரர்க்கு தவியாய் வந்தோனோ யேசு நாயகனென்றது நிசந்தானோ வுன்மே னாட்ட மதாயா வல்வாட்டு தையா சுரர்கதிபதியே வரத்திருமதியே சுந்தரனே ஞானேந்திரனே செப வந்தனை தந்திடு மெந்தனை யாளவும் 2. மனத்துயரிலா மரிமகனே ஞான மகத்துவனே கிருபையின் முகனே தவிது மகராசன் குலசத்திய வாசன் வனத்திலை யாயிரஞ் சனத்தைப் பொசிக்கச் செய்த மங்கள நித்திய மணவரசே சபை நங்கையர் துத்திய மிடு சிரசேயுன் 3. கப்பலிநீ நித்திரை கொண்டாயோ அந்தக் கள்ள மெனக்குமிப் போ விண்டாயோ எந்தன் கஸ்தியெலா நிவர்த்தி செய்வா யொப் பொரு வரிலாத முப்பொருளே யதீத உத்தம முற்துயர் வித்தகனே பெலன் மெத்த மிகுத்த திரித்துவனே யினம் 4. லாசர் மரிக்கு முன்னே கேட்டாயே பின்னும் நாலுநாள் தாமதம் போட்டாயே அந்த ஞாயமலோவிது பாயமலோ மாசணுகாத தேவ சேயா சகாயா நேயா வஞ்சக மஞ்சிய மந்திரனே யென் சஞ்சல மிஞ்சுது தந்திரமேதோ 5. வேதநாயகன் றமிழ்க் கொண்டாயே எந்தன் மெலிவு குறைகளெல்லாங் கண்டாயே யிவ் வேளையிலே யொரு நாளையிலே தீதனைத்து மறுத்துக் கோதனைத்தும் பொறுத்துத் தீர்ப்பது மிங்கெனையேற்பதும் நெஞ்சொடு பார்ப்பது மன்பொடு காப்பது முன் கடன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkamilaiyo Nee Itthanai Surrugal Kartrathumarivae Irakkamilaiyo 1. Nararkku Thaviyaay Vanthono Yaesu Naayakanendrathu Nisanthaano Vunmae Naatta Mathaayaa Valvaattu Thaiyaa Surarkathibathiyae Varatthirumathiyae Sundharanae Njaanaenthiranae Seba Vandhanai Thanthitu Mendhanai Yaalavum 2. Manatthuyarilaa Marimakanae Njaana Makatthuvanae Kirupaiyin Muganae Thavithu Makaraasan Kulasatthiya Vaasan Vanatthilai Yaayiranj Sanatthaip Posikkach Seytha Manggala Nitthiya Manavarasae Sapai Nangkaiyar Thutthiya Mitu Sirasaeyun 3. Kappalinee Nitthirai Kontaayo Andhak Kalla Menakkumip Po Vintaayo Endhan Kasthiyelaa Nivartthi Seyvaa Yop Poru Varilaadha Mupporulae Yatheedha Utthama Murthuyar Vitthakanae Pelan Mettha Mikuttha Thiritthuvanae Yinam 4. Laasar Marikku Munnae Kaettaayae Pinnum Naalunaal Thaamatham Pottaayae Andha Njaayamalovithu Paayamalo Maasanukaadha Thaeva Saeyaa Sakaayaa Naeyaa Vanjjaka Manjsiya Manthiranae Yen Sanjjala Minjsuthu Thanthiramaetho 5. Vaedhanaayakan Ramizhk Kontaayae Endhan Melivu Kuraigalellaang Kantaayae Yiv Vaelaiyilae Yoru Naalaiyilae Theedhanaitthu Marutthuk Kodhanaitthum Porutthuth Theerppathu Mingkenaiyaerpathum Nenjsotu Paarppathu Manpotu Kaappathu Mun Katan