பாடல் #39360
என்றைக்குச் சாவேனோ
🔤 Enraikkuch Saavaeno
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றைக்குச் சாவேனோ என்னேசுவை நான் என்றைக்குச் சேர்வேனோ ஓன்றாமனாதிபிதா உரிமைக் கிறிஸ்துவுக்குள் என்றை 1. இன்றைத்தினமோ நாளையோ இன்னமோராண்டோ இரவோ பகலெவ்வேளையோ துன்றிய வாலிபத்தோ தோன்றும் முதுமையிலோ துன்ப வியாதியிலோ சுகமாயிருக்கும் போதோ 2. வன்மம் பகையில்லாமல் குறை சொல்லாமல் மனச்சாட்சி வாதை கொல்லாமல் கன்மப் பாவஞ் சாராமல் கற்பனைத் துரோகஞ் சேராமற் கவலை விசாரத்தினால் கலங்கி மனஞ் சோராமற் 3. தரும வழியில் நடந்து தீமை கடந்து தவசுமுறைமை தொடர்ந்து பரமகதியை நோக்கி பலதுற்குணமும் நீக்கி பாவ மன்னிப்பை நாடி தேவகிருபையைத் தேடி 4. ஐந்து மெய் திருக்காயமும் சிலுவைதனில் அறையுண்டிருந்த நேயமும் நிந்தையின் முண்முடியும் நீண்ட இருப்பாணியும் இரத்தப் பிரவாகமுங் கண்டுத்துயரங்கொண்டு 5. வேதாகமங்களைத் தேர்ந்து நன்றாயாராய்ந்து மிகவும் மனங்களி கூர்ந்து சாதாய்ச் செம்மரியாடாய் சன்மார்க்கனாக நீடி வேதநாயகன் பாட்டால் மேசியாவைக் கொண்டாடி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enraikkuch Saavaeno Ennaesuvai Naan Enraikkuch Saervaeno Onraamanaathipithaa Urimaik Kiristhuvukkul Enrai 1. Inraitthinamo Naalaiyo Innamoraanto Iravo Pakalevvaelaiyo Thunriya Vaalibattho Thonrum Muthumaiyilo Thunba Viyaathiyilo Sugamaayirukkum Potho 2. Vanmam Pakaiyillaamal Kurai Sollaamal Manachsaatsi Vaathai Kollaamal Kanmap Paavanj Saaraamal Karpanaith Thuroganj Saeraamar Kavalai Visaaratthinaal Kalangki Mananj Soraamar 3. Tharuma Vazhiyil Natanthu Theemai Katanthu Thavasumuraimai Thodarnthu Paramakathiyai Nokki Palathurkunamum Neekki Paava Mannippai Naati Thaevakirupaiyaith Thaeti 4. Ainthu Mey Thirukkaayamum Siluvaidhanil Araiyuntirundha Naeyamum Ninthaiyin Munmutiyum Neenda Iruppaaniyum Ratthap Piravaagamung Kantutthuyarangkontu 5. Vaethaagamanggalaith Thaernthu Nanraayaaraaynthu Migavum Mananggali Koornthu Saathaaych Semmariyaataay Sanmaarkkanaaga Neeti Vaedhanaayakan Paattaal Maesiyaavaik Kontaati.