பாடல் #39358
தருணமீதுன் காட்சிசால
🔤 Tharunameethun Kaatsisaala
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணமீதுன் காட்சிசால அருளனாதியே திவ்விய சருவ நீதியே 1. கருணையாசன ப்பிரதாபா சமுக சன்னிதா மெய் பரம உன்னதா 2. பரசுரர் நரர் பணிந்து போற்றும் பரம நாயகா நின் பத்தர் தாயகா 3. உன்னதத் திருந்தென்னை யாளும் ஒரு பரம்பரா நற் கருணை யம்பரா 4. அரிய வல்வினை தீர்ப்பதற் குறவான தட்சகா ஓரனாதி ரட்சகா 5. அலகை நரகை அகற்றி முழுதும் அடிமை கொண்டவா என தருமை கண்டவா 6. தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும் தேவ பாலனே இம்மானு வேலனே 7. பரிசுத்த திரியேக மகத்துவ பராபர வஸ்துவே ஆதரி கிறிஸ்துவே 8. வேத நாயகன் பாடற் கருளும் மேன்மைக் கோமானே எனை மீண்ட சீமானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunameethun Kaatsisaala Arulanaathiyae Thivviya Saruva Neethiyae 1. Karunaiyaasana Ppirathaapaa Samuga Sannithaa Mey Parama Unnathaa 2. Parasurar Narar Paninthu Porrum Parama Naayakaa Nin Patthar Thaayakaa 3. Unnathath Thirunthennai Yaalum Oru Parambaraa Nar Karunai Yambaraa 4. Ariya Valvinai Theerppathar Kuravaana Thatsakaa Oranaathi Ratsakaa 5. Alakai Narakai Agarri Muzhuthum Atimai Kondavaa Ena Tharumai Kandavaa 6. Thinanthinam Narark Kirangkum Irangkum Thaeva Paalanae Immaanu Vaelanae 7. Parisuttha Thiriyaega Makatthuva Paraabara Vasthuvae Aadhari Kiristhuvae 8. Vaedha Naayakan Paadar Karulum Maenmaik Komaanae Enai Meenda Seemaanae