பாடல் #39357
கிருபை கூருமையனே
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
கிருபை கூருமையனே பாவியென் சிறுமை தீரு மெய்யனே நறுமையே மிருந்த பொருமைத் தேவனே நின் 1. ஆறு லெக்ஷண தேவா அடியர்க்குத் தேறுதலருள் பாவா திருமறை கூறுங் கருணை யோவா குறையறப் பேறுபெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறில்லா வஸ்துவே 2. பத்தர் தொழுஞ் சருவேசா பரிந்தருள் வைத்த சத்திய வாசா மகாபரி சுத்தக் கிருபையி நேசா சுயாதிப முத்தொழிற் றருமீசா முழுதுமென் மத்தியஸ்தனான நித்திய கிறிஸ்துவே யுன் 3. பாவத்தின் வழிநடந்தேன் பசாசுடன் சாபத்திலே கிடந்தேன் சாதா நித்திய கோபத்தையே அடைந்தேன் கொடுமையின் ஆபத்தில் மனமுடைந்தேன் அடிமையை மாபத்திரத் தொடென் பரதாபத்தைப் பார்த்திரங்கி 4. சரணஞ் சரணம் நாதா தவிக்கிற தருணம் தருணம் வேதா தயாபர கிரணமிலங்கு பாதா கிலேசங்கள் திறணமுறாத நீதா திடுக்கிடும் மரண வேளையிலும் கரணமயங்கும் போதும் 5. சாதிகள் பகையாச்சு சலித்தது பேதையர் சொலும் பேச்சு பிரட்டர்கள் பாதையும் வலுநீச்சுப் பாழிலென் வாதையின் பெருமூச்சு மயக்கற வேதநாயகன் சொல் லாதிமூலமே நின்