பாடல் #39354
நீயே யெனையாளும்
🔤 Neeyae Yenaiyaalum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயே யெனையாளும் அம்பரா மனுடாவதாரா. நேயே வானினின்று வந்தாயே பராபரன்றன் சேயே கிருபை புரிவாயே என் முன்னிற்பாயே 1. ஆதியனந்த பரஞ் சோதி திவ்விய அருமைக் கிறிஸ்து வேயென் நீதி சாதியனைத்து மீட்க மாதின் வித்திலுதித்த ஏதமில்லாத யேசுநாத ஜீவாதிபதி. - நீயே 2. அந்தா அனாதிபிதா மைந்தா அடியார்க் கருள் புரியும் பாதார விந்தா நந்தா தருள் செயுமனந்தா பாவிகளுக்குச் சொந்தா சமையமிது வந்தாளுனக் கபையம். - நீயே 3. துங்கா சுவிசேடப் பிரசங்கா மருள் துன்னுங் கொடுமையின் காலங்கா மங்கா வரப்பிரசா னங்கா மரணவேளை பங்காக நின்றருள் செயுங் காரணப் பிரதாபா. - நீயே 4. துக்கக் கவலை யொருமிக்கக் கூடித் துன்னும் விசாரத்தாலே வாடி அக்கிரமத்தின் கிரிகை மிக்கப் பெருக்கமாகி அந்த காரத்தின் மக்கள் கொந்தளித்து நிற்கிறார்கள். - நீயே 5. ஈட்டுத்திற மிலானைக் கூட்டு பரம நாட்டுக் கிருபையைப் பாராட்டு மாட்டுக் கொட்டிற்குள் வந்த ஆட்டுக் குட்டியுனக்கு நீட்டுப்புகழ் நெல்லையாள் பாட்டுப் படிக்கிரங்கி. - நீயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyae Yenaiyaalum Ambaraa Manutaavathaaraa. Naeyae Vaanininru Vanthaayae Paraabarandran Saeyae Kirupai Purivaayae En Munnirpaayae 1. Aathiyanandha Paranj Sothi Thivviya Arumaik Kiristhu Vaeyen Neethi Saathiyanaitthu Meetka Maathin Vitthiluthittha Aedhamillaadha Yaesunaadha Jeevaathibathi. - Neeyae 2. Anthaa Anaathipithaa Mainthaa Atiyaark Karul Puriyum Paathaara Vinthaa Nanthaa Tharul Seyumananthaa Paavigalukkuch Sonthaa Samaiyamithu Vanthaalunak Kapaiyam. - Neeyae 3. Thungkaa Suvisaedap Pirasangkaa Marul Thunnung Kotumaiyin Kaalangkaa Mangkaa Varappirasaa Nangkaa Maranavaelai Pangkaaga Nindrarul Seyung Kaaranap Pirathaapaa. - Neeyae 4. Thukkak Kavalai Yorumikkak Kootith Thunnum Visaaratthaalae Vaati Akkiramatthin Kirikai Mikkap Perukkamaaki Andha Kaaratthin Makkal Kondhalitthu Nirkiraarkal. - Neeyae 5. Eettutthira Milaanaik Koottu Parama Naattuk Kirupaiyaip Paaraattu Maattuk Kottirkul Vandha Aattuk Kuttiyunakku Neettuppugazh Nellaiyaal Paattup Patikkirangki. - Neeyae