பாடல் #39353
யேசு கிருபாசனா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
யேசு கிருபாசனா நேசமனா யேக பராசரணேகதி ஒசியன்னா. ஆசறு பாவவி மோசன்னா ஆ மனா மனா. - யேசு 1. வானத்திருந்து வந்த வலமைச் சீமானே மனத்துயரந் தீர்க்காயோ கோனே. - யேசு 2. அருமைக் கிறிஸ்தென் ஆசை மேசையா ஆபத் ததிகரித்துதையா. - யேசு 3. சிறுமை காயோ சீவப்பிரானே சீயோனை மணஞ் செய்த பெருமானே. - யேசு 4. நெருக்கப் படாமல் நேருங்குதாவே பெருக்கத் தருள் செய்யும் பிதாவே. - யேசு 5. துன்பத்தை மாற்றும் துயரறத் தேற்றும் அன்புப் பெருக்கிலணைத் தாற்றும். - யேசு 6. நம்பினேன் பாதம் ஞானாசீர்வாதம் எம்பரா அருள் வரப்பிரசாதம். - யேசு 7. வேதநாயகன் பா மேவுபேரின்பா ஆதி பராபரமே யன்பா. - யேசு