பாடல் #39351
பரம பிதாவே கண்பாராயோ
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
பரம பிதாவே கண்பாராயோ பாராயோ கிருபை கூராயோ பார்த்தென் கவலையெல்லாந் தீராயோ. சரமசரங்க டொழுஞ் சருவேசுரா தந்தாய் நின்சரண் சரணந்தாதியே. - பர 1. பொன்னுல கமுமக் காசனமே பூதலத்தின் ஞான போசனமே உனனதத்திருக்கு மொன் றானதேவே உத்தமகர்த்தனோர் யோவாவே. - பர 2. அரூப சொருபி அருபாரூபி அற்புத சகல நன்மைப் பிரதாபி கருணைச் சுயம் பிரகாச பரப்பிரமமே காத்தருளுந் தஞ்சம் திருவுளமே. - பர 3. நீதானென் குல தெய்வமுன் னோனே நெல்லை வேதநாயகன் சொன்னானே வேதா வேதாந்தப்பழம் பொருளே மேசியா முகம் பார்த் தெனக்கருளே. - பர