பாடல் #39349
வானத்தனாரே மெஞ் ஞானத்தனாரே
🔤 Vaanatthanaarae Menj Njaanatthanaarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தனாரே மெஞ் ஞானத்தனாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே கானகத்திலே வந்த மேன்மைச் சிங்கேறே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 1. மாறாக் கருணையாரே வலிய வந்தாரே மாட்டுக் கொட்டிற் பிறந்தாரே ஐயா பேறு தந்தாரே பெத்லே மூராரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 2. வாக்குத் தத்தத்தாரே வல்லபத்தாரே வானத்தினின்று வந்தாரே மா பாக்கியத்தாரே பக்கிஷத் தாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 3. ஆட்டுக் குட்டியாரே ஆனந்தத்தாரே காட்டுக்குளே பிறந்தாரே வந்து மீட்டுக் கொண்டாரே வேடிக்கையாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 4. அந்த நற்கோனாரே ஆதித் கோனாரே கந்தைத் துணியைக் கொண்டாரே பல விந்தைக் கோனாரே வேதக் கோனாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 5. நல்ல மெய்க் கத்தாவே ஞானப்பத்தாவே வல்லமைத் தேவாதி தேவே ஓகோ துல்லிபக் கோவே தோத்திரப் பிதாவே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான 6. ஆகமத்துரையாரே அன்புவைத்தாரே சோகு சர்ப்ப மிதித்தாரே ஓகோ ஏசு வஸ்தாரே யிஸ்திரி வித்தாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே - வான 7. சாதியை மீட்டாரே தள்ளமாட்டாரே வேதநாயகன் பாட்டாரே ஓகோ பேதைக் காட்டாரே பேதங் காட்டாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthanaarae Menj Njaanatthanaarae Seeyon Maanukkam Maanatthanaarae Kaanakatthilae Vandha Maenmaich Singkaerae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 1. Maaraak Karunaiyaarae Valiya Vanthaarae Maattuk Kottir Piranthaarae Aiyaa Paeru Thanthaarae Pethlae Mooraarae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 2. Vaakkuth Thatthatthaarae Vallapatthaarae Vaanatthininru Vanthaarae Maa Paakkiyatthaarae Pakkishath Thaarae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 3. Aattuk Kuttiyaarae Aanandhatthaarae Kaattukkulae Piranthaarae Vanthu Meettuk Kontaarae Vaetikkaiyaarae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 4. Andha Narkonaarae Aathith Konaarae Kanthaith Thuniyaik Kontaarae Pala Vinthaik Konaarae Vaedhak Konaarae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 5. Nalla Meyk Katthaavae Njaanappatthaavae Vallamaith Thaevaathi Thaevae Oko Thullibak Kovae Thotthirap Pithaavae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana 6. Aagamatthuraiyaarae Anpuvaitthaarae Soku Sarppa Mithitthaarae Oko Aesu Vasthaarae Yisthiri Vitthaarae Seeyon Maanukkam Maanatthanaarae - Vaana 7. Saathiyai Meettaarae Thallamaattaarae Vaedhanaayakan Paattaarae Oko Paethaik Kaattaarae Paedhang Kaattaarae Seeyon Maanukkam Maanatthanaarae. - Vaana