பாடல் #39347
ஆசை கிறிஸ்தரச னிவர்தானோ
🔤 Aasai Kiristharasa Nivarthaano
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை கிறிஸ்தரச னிவர்தானோ வென்றன் அருமை ரட்சக ரென்பதிவர் தானோ 1. மாசில்லாத சித்திர பானு போலுதிக்கிறார் மகிமைத் தமது திருவசனத்தை விதிக்கிறார் வந்தெனை முகம் பராரா மனத்துயரத்தைத் தீராரா மாட்டாரா கைவிட்டுப் போட்டாரா மாட்டுக் கொட்டிற்குளிவர் வந்த தென்னமோ. - ஆசை 2. அழகினில் ராசகுமாரனைப் போலே யிருக்கிறார் அன்பான பார்வை யாலென்ன கத்தையுமுருக்கிறார் ஆற்றுமத்தகை மீறுதே யாசை விண்ணுலு மேறுதே அற்புதமோ தெய்வ வுற்பனமோ ஆச்சரிய மாயெனை மீண்டாண்ட தெய்வமோ. - ஆசை 3. அத்தன் றிருச் செயலைப் புத்தி யெப்படி கொள்ளும் ஆண்டவன் கிருபைக் கென்னக மக்களித்துத் துள்ளு ஆராய் வில்லாத வாழமே அளவிலடங்காத நீளமே யவர் அன்பது மின்பமதும் ஆச் சரியமாய் பிரமிப் பாக்கி வைக்குதே. - ஆசை 4. கர்த்தன் றிருவுடலிற் காயமைந்திருக்குது கங்குல் பகலு மாயென் கருத்தினை யுருக்குது காணாத வாட்டை நோக்காரா கண்டு பிடித்தாற் றூக்காரா அவர் கற்பனையும் விற்பனமுங் காட்சியாகத் தோன்றி யென் கண்ணுக்குள் நிற்குதே - ஆசை 5. வேத நாயகன் சொன்ன பாட்டைக் குலாவுகிறார் மிக்க சபையினடுவே வந்துலாவுகிறார் மேனியெல்லாம் பசும் பொன்னா மெய்யாக வானத்தின் மன்னா இவர் விண்ணோர்க்கு மண்ணோர்க்கு மேவி நடுவாக வந்த மேசையாவோ - ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Kiristharasa Nivarthaano Vendran Arumai Ratsaka Renbathivar Thaano 1. Maasillaadha Sitthira Paanu Poluthikkiraar Makimaith Thamathu Thiruvasanatthai Vithikkiraar Vanthenai Mugam Paraaraa Manatthuyaratthaith Theeraaraa Maattaaraa Kaivittup Pottaaraa Maattuk Kottirkulivar Vandha Thennamo. - Aasai 2. Azhakinil Raasakumaaranaip Polae Yirukkiraar Anpaana Paarvai Yaalenna Katthaiyumurukkiraar Aarrumatthakai Meeruthae Yaasai Vinnulu Maeruthae Arpudhamo Theyva Vurpanamo Aacchariya Maayenai Meentaanda Theyvamo. - Aasai 3. Atthan Riruch Seyalaip Putthi Yeppati Kollum Aandavan Kirupaik Kennaka Makkalitthuth Thullu Aaraay Villaadha Vaazhamae Alavilatangkaadha Neelamae Yavar Anbathu Minbamathum Aach Sariyamaay Piramip Paakki Vaikkuthae. - Aasai 4. Kartthan Riruvudalir Kaayamainthirukkuthu Kangkul Pakalu Maayen Karutthinai Yurukkuthu Kaanaadha Vaattai Nokkaaraa Kantu Pititthaar Rookkaaraa Avar Karpanaiyum Virpanamung Kaatsiyaagath Thonri Yen Kannukkul Nirkuthae - Aasai 5. Vaedha Naayakan Sonna Paattaik Kulaavukiraar Mikka Sapaiyinatuvae Vanthulaavukiraar Maeniyellaam Pasum Ponnaa Meyyaaga Vaanatthin Mannaa Ivar Vinnorkku Mannorkku Maevi Natuvaaga Vandha Maesaiyaavo - Aasai