பாடல் #39345
கர்த்தா பர்த்தா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
கர்த்தா பர்த்தா வெனைக்கா மேசியா சருவேசா கானான் ராட்சிய பாரத் தீசா தாவீது குமரேசா. 1. மார்த்தாள் மரியாள் பணி செயும் வித்தாரக் கிருபை நேசா மாசிலாப் பிரஸ்தாப வுச்சித இரட்சக ரேசு ராசா. - கர்த்தா 2. முன் னாளதமே வைபவத்தை மாற்ற வுதித்த வஸ்துவே மூடாற் றுமத்தின் கேடாற்றி யெனை யீடேற்றியருள் கிறிஸ்துவே. - கர்த்தா 3. மானார் கோனா ரும் போற்றி வணங்கும் பொற்றாளா சீனாச் சியோன் மலை வரும் ஞான மனவாளா. - கர்த்தா 4. மாட்டுக் கொட்டினில் வந்த ஆட்டுக் குட்டி யரே காட்டி நின்னருள் பூண்டியன்புபா ராட்டிக் கொள்வீரே. - கர்த்தா 5. சொந்தச் சீவனை யாட்டுக்காகத் தந்த நல்லாயனே துக்கப்பட்ட நராட்க்களை யிரட் சிக்க வந்த சகாயனே. - கர்த்தா 6. ஆதமம் மணனே வையம் மணி நானும் நிறுவாணி யானாலுமெனை மீட்டுக் கொண்டெனை யாண்ட கண்காணி. - கர்த்தா 7. அசரீரி ஓவுதாரி ஆறோனாசாரி யாதரி பராமரி வி சாரி தற்காரி. - கர்த்தா 8. வானோர் நெடுவானடு வினி லாட வந்தமேசையா வந்தனை தந்துனை வேதநாயகன் பாட மகிழ்ந்த வேசையா. - கர்த்தா